ஜூலிக்கு விமலுடன் ரகசிய திருமணமா? வைரலாகும் புகைப்படம்!

0
575

ஜூலி ஜல்லிகட்டு போரட்டத்திற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிக பிரபலம் ஆகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சரி அந்நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவரை வைத்து பல நெட்டிசன்கள் மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோ உருவாக்கி வந்தனர். அந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஓவியா, ஆர்வ், சுஜா, கணேஷ் வெங்கட்ராமன், ரைசா, ஹரிஷ் கல்யாண் மற்றும் பிந்துமாதவி என பலரும் விளம்பரங்கள், சினிமாவில் நடித்து வருகின்றனர்.

பலரும் படங்களில் நடிக்கும் போது ஜூலி கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.  எதற்கும் மனம் தளராத அவர் கலா மாஸ்டர் உடன் நடனம் ஆடியதை கலாய்த்து நெட்டிசன்கள் தங்கள் மீம்ஸ் உருவாக்கினார்கள். அதற்கும் கவலைபடுபவராக தெரியவில்லை.  தற்போது ஜூலி நடிகர் விமலுடன் மாலை போட்டுக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த பலரும் ஜூலிக்கு நடிகருடன் திருமணம் ஆகிவிட்டதா என்று பலரும் கேட்டு வந்தனர். ஆனால் இது ஷூட்டிங் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூலிக்கும் பட வாய்ப்பு வந்துவிட்டது போல!

உங்க கருத்தை தெரிவிக்கலாம்