அதிவேக ஜியோ 4G டேட்டா கிடைக்கப்போகும் 17 இடங்கள்!

0
507

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட 17 இடங்களில் அதிவேக ஜியோ 4G டேட்டா சேவையை வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிரடி சலுகைகள்:

இந்திய வர்த்தக சந்தையில் பெரும் வரவேற்புடன் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ ஆரம்பத்தில் இருந்தே பல அதிரடி சலுகைகளை வழங்கிக் கொண்டே இருக்கிறது. இந்தாண்டு தீபாவளி சலுகையாக நூறு சதவீத கேஷ்பேக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பல கவர்ச்சிகர திட்டங்களை கொடுத்து அதிகப்படியான வாடிக்கையாளர்களை சம்பாதித்திருக்கிறார் முகேஷ் அம்பானி.

அதிவேக 4G:

பல இடங்களில் அதிவேக இன்டெர்நெட் டேட்டா கிடைக்கவில்லை என குறைபாடுகள் வந்துகொண்டிருக்கின்றன. மெட்ரோ சிட்டிகளிலும் கூட சில இடங்களில் அதிவேக சேவையை பெற முடியாமல் தவிக்கின்றனர் ஜியோ பயனாளர்கள். இந்த குறையை தடுக்கும் விதமாகதான் இப்போது இந்தியாவின் 17 நகரங்களில் அதிவேக ஜியோ 4G டேட்டா சேவையை வழங்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது ஜியோ நிறுவனம்.

17 இடங்கள்:

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, இமாச்சல பிரதேசம், உத்திரபிரதேசம், ஒரிசா, மேற்கு வங்காளம், பீகார், டெல்லி, குஜராத் உள்ளிட்ட 17 இடங்களில் அதிவேக ஜியோ 4G டேட்டா சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்னெடுப்புகளையும் தொடங்கியுள்ளது இந்நிறுவனம்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்