“ஜிமிக்கி கம்மல்” புகழ் ஷெரில் பற்றிய சுவாரசியங்கள்

0
20048

கேரளாவில் உள்ள காமர்ஸ் கல்லூரி மாணவிகள் ஆடிய ‘ஜிமிக்கி கம்மல்’ நடனம் கேரளா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கேரளத்து பெண்குட்டிகள் ஆடும் இந்த நடனத்தில், முன் வரிசையில் ஆடும் அழகான பெண்குட்டி தமிழக ஆண்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார். இவர் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்துள்ளவர்களின் எண்ணிக்கை மட்டும் 3 மில்லியனை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

ஜிமிக்கி கம்மல் - ஷெரில்
ஜிமிக்கி கம்மல் – ஷெரில்

ஆ பெண்குட்டியின் பேரு ஷெரில். இவர்தான் லீட் டான்ஸர். பக்கத்தில் இன்னொரு லீட் டான்ஸராக அண்ணா ஜார்ஜ். கல்லூரி பேராசிரியர்கள் இருவர்தான் இந்த நடனத்தை கோரியோகிராஃப் செய்து கொடுத்தார்களாம். இந்த நடனத்தின் மூலம் காமர்ஸ் கல்லூரி மாணவர்கள் அனைவரையும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்துவதற்கான ஊக்குவிப்பாக இருக்கும் என ஷெரில் தெரிவிக்கிறார்.

ஜிமிக்கி கம்மல் - ஷெரில்
ஜிமிக்கி கம்மல் – ஷெரில்

இந்த வீடியோவை ஒரு ஜாலிக்காக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சிறிய அளவில்தான் செய்தோம். ஆனால் சமூக ஊடகங்களில் பெரியளவில் பகிரப்பட்டும், பேசப்பட்டும், ரசிக்கப்படும் வருகிறது என்பதை பார்க்கும்போது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார்.

ஜிமிக்கி கம்மல் - ஷெரில்
ஜிமிக்கி கம்மல் – ஷெரில்

ஷெரில் நீங்கள் நினைப்பதுபோல மாணவி அல்ல. அவர் டீச்சராம். கேரளாவில் மட்டும் எப்படிங்க டீச்சர்ஸ் எல்லாரும் அழகா க்யூட்டா இருக்காங்க? என்ற கேள்விக்கு ஆண்டவனாலும் கூட பதில் சொல்ல முடியாது. தமிழ்நாட்டு மலர் டீச்சர் சேட்டன்களின் மனசுகளை கொள்ளையடிச்சு வர, கேரளத்திலிருந்து ஷெரில் டீச்சர் தமிழ் பசங்களின் மனசுகளை பிடிச்சுப்போக தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வரலாம் என்கிறது கோடம்பாக்கம் பட்சி.

 

 

உங்க கருத்தை தெரிவிக்கலாம்