தமிழக வரலாற்றிலே முதன்முறையாக ஜெயா தொலைக்காட்சியில் திமுக பிரபலம்!

0
617

தமிழகத்தில் இருக்கும் இரண்டு மிக பெரிய கட்சி, அதுவும் எதிர் கட்சிகள் என்று தான் சொல்ல வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை ஆட்சியை பிடிப்படிப்பது அதிமுக அல்லது திமுக இவை இரண்டும் தான். இவைகளின் துணையோடு தான் தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி பிடிக்கும். எப்பொழுதுமே இந்த இரண்டு கட்சிகள் ஒருவருக்கொருவர் மற்றவர்களின் மீது குறைகளை சொல்லிக் கொண்டுதான் பார்த்திருப்போம். அதுவுமு் தேர்தல் நேரம் வந்து விட்டால் போதும் ஜெயா தொலைக்காட்சியிலும் சரி சன் தொலைக்காட்சியிலும் சரி அவர்கள் இதுவரை செய்து வந்த குறைகளை வரி இரைப்பார்கள். அப்படி இருக்கையில் ஜெயா தொலைக்காட்சியின் ஜெயா ப்ளஸ் 24 மணி நேர செய்தி சேனலில் நேற்று இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகனின் நேர்காணல் ஒளிபரப்பட்டுள்ளது. அதிமுகவினரை மட்டுமல்ல திமுகவினரையும் இந்த நிகழ்ச்சி ஆச்சரியமடைய வைத்துள்ளது. நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன் நான் எதையுமே சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டேன் அனைவரிடமும் மிக எளிமையாக பழகக்கூடியவன். கருணாநிதிக்கு அடுத்து தனக்கு தான் சட்டசபையில் அதிக அனுபவம். 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் உண்டு. நான் வக்கீல் என்பாதலும் எந்த கருத்தை கூறினாலம் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். எனக்கு கொள்கையில் உறுதி உள்ளது. ஆனால் பகைமை உணர்வை பாராட்ட மாட்டேன். எதிர்கட்சியாக இருந்தாலும் அவர்கள் கூறும் நல்ல கருத்தை பாராட்டுவேன். ஒரு வீரனை இன்னொரு வீரனை பாராட்ட வேண்டும். நான் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டியிருந்தேன், அப்போழுது ஜெயலலிதா அவர்கள் என்ன புத்தகம் என்று கேட்டார்கள் அதற்கு இந்த ஆசிரியோரட புத்தகத்தை படியுங்கள் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார். ஊட்டியில் பிளாஸ்டிக் போடுவதை எதிர்த்து ஒரு மசோதா குறித்து விவாதம் நடந்த போது ஜெயலலிதா பேசியதை பாராட்டி இருக்கிறேன். யாரிடத்தில் திறமை இருந்தாலும் அவர்களை நான் பாராட்டுவேன் என்று கூறினார். தமிழக மக்களுக்கு இந்த நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சியை தந்தது என்று தான் சொல்ல வேண்டும். எப்பொழுதுமே ஒருவருகொருவர் குறைகளை குறித்து பேசும் தொலைக்காட்சி தற்போது இந்த அவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துவது மிக பெரிய ஆச்சிரியதை ஏற்படுத்தியது. இன்னும் என்ன நடக்க போகிறது தமிழ்நாட்டில் பலரும் வியப்புடனே உள்ளார்கள் மக்கள்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்