2000 வருடங்களில் ஜல்லிக்கட்டு அழிந்ததாக வரலாறு இல்லை!

0
2095

கடந்த 2000 வருடங்களில் எத்தனயோ பேரரசுகள், அரசுகள் வென்று வீழ்ந்திருக்கலாம். பல நூறு கலாச்சாரங்கள் மறைந்திருக்கலாம். ஆனால் தமிழர்களின் வீரத்திற்கும், கலாச்சாரத்திற்கும் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு அழிந்ததாக வரலாறே இல்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டை முடக்க நினைத்து அதன் மீது முதலில் கை வைத்த அமைப்பே PeTAதான். தமிழர்களின் தன்னெழுச்சி சீற்றத்தைக் கண்டு நடுநடுங்கிப் போனது அந்த அமைப்பு.

தைப்புரட்சி, மெரீனா புரட்சி என பெயரிடப்படும் நமது ஜல்லிக்கட்டு போராட்டங்களை தொடர்ந்து அரசும், நீதிமன்றமும் நிறுவியிருந்த தடை வெற்றிகரமாக உடைக்கப்பட்டது. கடந்தாண்டு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழகம் மட்டுமல்ல, உலகமே பார்த்து ரசித்தது. தமிழனின் வீரம் உலக அரங்கில் கண்டு வியக்கப்பட்டது. தமிழர்களின் கலாசச்சார பிடிப்பை இந்தியாவே கண்டு வியந்தது.

இரு நூறு நூற்றாண்டுகளாக தமிழர்களின் பாரம்பரியத்துடன் இணைந்திருக்கும் காளைகளையும் அவைதம் வீரத்தினையும் அயல் நாடுகளும் ஆச்சரியத்துடன் பார்த்தன. ஜல்லிக்கட்டு தடைக்குப் பின் இருக்கும் அரசியலையும், வியாபாரத்தையும் உலக தளத்தில் போட்டு உடைத்தான் தமிழன். மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவன சதிகளை முறியடித்துள்ளோம் என்ற மாதகு பெருமைகளுடன் இந்தாண்டும் ஜல்லிகட்டை குதூகளிப்புடன் நடத்தி முடிக்க ஆயத்தம் ஆவோம்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்