இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ. பிரவின் ராவ் பற்றி 5 ‘நச்’ தகவல்கள்!

0
195

இன்போசிஸ் நிறுவனத்தின் மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் இயக்குனராக பதவி வகித்த விஷால் சிக்கா ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய இயக்குனராக யூ.பி.பிரவின் ராவ் நியமிக்கப்பட்டார். இந்நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சாலில் எஸ் பாரீக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரவின் ராவ் ஜனவரி 2-ம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 5 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று கூறப்படுகிறது.

  1. சலில் எஸ்.பரேக் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலை பொறியியல் படிப்பையும், இயந்திர பொறியியல் படிப்பை முடித்துள்ளார்.

2. மும்பை ஐ.ஐ.டியில் ஏரோ நாட்டிகல் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.

3. ஐ.டி சேவைகள் துறையில் உலகளாவிய அளவில் 30 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

4. 1986-ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தில் சேர்ந்த பிறகு தலைமை நிர்வாக அலுவலர், உள்கட்டமைப்பு மேலாண்மை சேவைகள், சில்லறை விற்பனை, நுகர்வோர் பேக்கேஜட் பொருட்கள், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் லைஃப் சயின்ஸ் போன்றவற்றில் தலைமைப் பொறுப்பு வகித்துள்ளார்.

5. இந்திய தொழில் கூட்டமைப்பு தேசிய கவுன்சில் மற்றும் நாஸ்காம் நிர்வாகக் கவுன்சில் போன்றவற்றில் உறுப்பினராகவும் உள்ளார்

உங்க கருத்தை தெரிவிக்கலாம்