2வது டெஸ்டில் இலங்கையை வீழ்த்திய இந்தியா… உலக சாதனை படைத்த அஸ்வின்!

0
127

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், இரண்டாவது டெஸ்ட் நாக்பூரில் நடந்தது. முதல் இன்னிங்க்ஸில் இலங்கை 2௦5, இந்தியா 61௦/6 ரன்கள் (“டிக்ளேர்”) எடுத்தன. பின் இரண்டாவது இன்னின்சை துவக்கிய இலங்கை அணி, மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட்டிற்கு 21 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று நடந்த நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி, வந்த வேகத்தில் அவுட் ஆகி வெளியேறியது. கருணாரத்னே, ஜடேஜா ஆகியோர் சுழல் பந்து வீச்சில் சிக்கி வெளியேறினர். உமேஷ் யாதவ், திரிமான்னே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இலங்கைக்கு எதிராக நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சுழல் பந்து வீச்சில் சுழன்று சுழன்று அடித்த அஸ்வின் தனது 3௦௦ விக்கெட்டுகளை வீழ்த்தி, உலக சாதனை படைத்துள்ளார். வெறும் 54 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 3௦௦ விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்திருக்கிறார்.

இரண்டாவது இன்னின்சில் இலங்கை அணி 166 ரன்களுக்கு சுருண்டு போய் தோல்வியை தழுவியது. இந்திய வீரர்கள் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளையும், உமேஷ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-௦ என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி, அதாவது இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் டிசம்பர் 2ம் தேதியன்று தொடங்குகிறது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்