ஹைகோர்ட் உத்தரவால் ஆடிப்போன விக்னேஷ் சிவன்..!

0
777
ஹைகோர்ட் உத்தரவால் ஆடிப்போன விக்னேஷ் சிவன்..!

பொங்கலுக்கு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான தான சேர்ந்த கூட்டம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படத்தில் சொடக்கு பாடல் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில் இந்தப் பாடலில் உள்ள சில வரிகளை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
சொடகுக்கு போடுது பாடலில் உள்ள “அதிகார திமிரை விரட்டி விரட்டி வெளுக்க தோணுது” என்ற வரிகள் வன்முறையை தூண்டும் விதத்திலும், அரசியல்வாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளதாகவும், இந்த வரிகளை நீக்குமாறு உத்தரவிட வேண்டும் என அதிமுகவைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

வன்முறையைத் தூண்டும் வகையிலும் வரிகள் உள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த மனு விசாரித்த நீதிபதிகள் அப்போது சொடக்கு மேல சொடக்கு பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்