பொங்கலன்று இதை வீட்டு வாசலில் வைப்பதற்கு காரணம் தெரியுமா?

  0
  26576

  பொங்கல் பண்டிகையின் போது நம் வீட்டு வாசலில் கன்னுபில்லை பூ, பூலாம்பூ , ஆவாரம்பூ , மாவிலை, வேப்பிலை இவைகளை ஒன்றாக சேர்த்து கட்டிவைப்பது வழக்கம். ஏதற்கு நாம் இதை வீட்டு வாசலில் வைக்கிறோம் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லலை.

  பொங்கல் பண்டிகையின் போது இவை வீட்டு வாசலில் வைப்பதற்கு காரணம் தெரியுமா?

  தை மாசி மாதங்கள் குளிர் காலங்கள் ஆகும். பனி முடிவிற்கு வரும்போது மனிதர்களுக்கு நோய் தாக்குதல்களும் அதிகமாவே இருக்கும். இந்நோய் தாக்குதலில் நம்மை பாதுகாத்து கொள்வதற்குதான் நம் முன்னோர்கள் பொங்கல் நாளில் இந்த மூலிகை தொகுப்பை வீட்டின் வாசலில் சொருகி வைக்க பழக்கினர்.

  கன்னுபில்லை பூ, பூலாம்பூ , ஆவாரம்பூ , மாவிலை, வேப்பிலை ஆகிய மூலிகைகளில் இருந்து வெளியேறும் மணமானது காற்றுடன் கலந்து வீட்டுக்குள் வரும். மூலிகை காற்றை சுவாசிக்கும்போது உங்களுடைய ஆரோக்கியம் மேம்படும்.

  தித்திக்கும் தைப் பொங்கல் ரெசிபி!