ரோஜா இதழை சாப்பிட்ட 1 மணி நேரத்தில் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள்!

0
585

உடல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கும் வியாதிகளுக்கும் பக்கவிளைவு அற்ற இயற்கை பொருட்களை கொண்டு குணப்படுத்த முடியும். அவற்றில் எளிதில் கிடைக்ககூடிய நான்கு இயற்கை தாவரங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இந்த இயற்கைப பொருட்களின் மருத்துவ பலன்கள் இதோ.

நெல்லிக்காய்

நெல்லிகாய் பொடியாக்கி பயன்படுத்துவதால் கால்சியம் சத்து அதிகாிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து  உடல் வலிமை பெறுகிறது. அதுமட்டுமில்லாமல் உடலின் சூட்டை குறைக்கிறது.

கருஞ்சீரகம்

குடலில் உண்டாகும் குடற்புழுவை கட்டுப்படுத்தி குணப்படுத்த உதவுகிறது. கண் சம்மந்தான பிரச்சனைகளுக்கும் இது தீர்வு தருகிறது. வெற்றிலையுடன் சேர்த்து உட்கொள்ளும் போது விந்து உற்பத்தி அதிகரிக்கிரது.

பூவரசம்

தோல் பிரச்சனைகளுக்கு பூவரசம் பட்டையை பொடியாக்கி பயன்படுத்துவதால் விரைவில் குணமாகும். பெருவயிறு வீக்கத்தை இது குணப்படுத்தும். வெண்புள்ளி நோய்க்கு இது சிறந்த மருந்தாகும்.

ரோஜா இதழ்

ரோஜா நறுமணம் உண்டாக்குவது மட்டுமில்லாமல் மருந்தாகவும் செயல்படுகிறது. ரோஜா இதழை பொடியாக்கி சாப்பிட்டால் சில நாட்களில் மலசிக்கல் சரியாகும். ரோஜா இதழ்களை கற்கண்டு மற்றும் வெற்றிலையில் வைத்து மடித்து சாப்பிட்டால் அடுத்த 1 மணி நேரத்திற்குள் உடல் சூடு குறைந்து குளிர்ச்சி உண்டாகும். தயிரில் ரோஜா இதழ்களை கலந்து சாப்பிட்டாலும் உடலில் வெப்பம் குறையும்.

சிறியாநங்கை இலை

விஷக்கடி சிறியாநங்கை இலையை எடுத்துக் கொள்வது சிறந்தது. உடலில் உண்டாகும் அரிப்பு மற்றும் தோல் வியாதிகளுக்கும் பயன்படுத்தலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இது சிறந்த மருந்தாகும்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்