எந்த நேரத்தில் பொங்கல் வைத்தால் ராஜயோகம் கிடைக்கும்?

0
21227

தை திருநாளின் முதல் நாளான பொங்கலன்று, கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கலிட்டு வழிபாடு நடத்துகிறோம். இதுவே தமிழர்களின் மரபு. எந்த நேரத்தில் பொங்கல் வைத்து வழிபட்டால் ராஜயோகம் கிடைக்கும்? செல்வம் குவியும் என ஆரூடர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரிய பகவான்:
சூரியனே எல்லாவற்றுக்கும் அதிபதி. சூரியனை வணங்கினால் பித்ருதோஷம் நீங்கும் என சாத்திரம் கூறுகிறது. எனவே சூரிய பொங்கலன்று சூரிய ஓரையில் பொங்கல் இட்டால் பல நன்மைகள் கிடைக்கும்.

வழிபடும் முறை:
நல்ல நேரத்திற்குள் பொங்கல் செய்துவிட்டு, பிறகு வடை, பாயாசம் மற்றும் 21 வகையான சமைத்த காய்கறிகளையும், 21 வகையான சமைக்காத காய்கறிகளையும் சூரிய பகவானுக்கு படைக்க வேண்டும். இத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, கரும்பு ஆகியவற்றையும் வைத்து சூரியனுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும்.

வழிபாட்டு நேரம்:
நிகழும் ஹேவிளம்பி வருடம் தை திங்கள் 14-01-2018 ஞாயிற்றுக் கிழமை
சூரிய ஓரை நேரம்: காலை 6 மணி மணிக்கு மேல் 7 மணி மணிக்குள்
குரு ஓரை நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை

சூரிய ஓரை:
சூரிய ஓரையில் பொங்கல் வைத்தால் ராஜயோகம் தேடி வரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். சூரிய பகவானின் ஆசிர்வாதமும் அருளும் இந்த சூரிய ஓரையில் பரிப்பூரனமாக கிடைக்கும்.

பொங்கலன்று தமிழகத்தில் நடக்கும் 8 பெருமிதமான விஷயங்கள்!

ஜல்லிக்கட்டு புலிக்குளம் ,காங்கேயம் காளை பற்றி தெரிஞ்சிப்போம்

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்