பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டி தந்த ஜி.வி.பிராகாஷ்!

0
158

மாணவிகளுக்கு கழிப்பறை கூட இல்லாமல் நிறையப்பள்ளிகள் இருக்கின்றது. அதனால் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். சிலர் கழிப்பறை இல்லாததால் மாணவிகள் பள்ளி செல்வதை பாதியிலே நிறுத்திக் கொள்ளிக்கின்றனர். அந்த கவலையை போக்கும் வகையில் புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். Our village our responsibility என்று தொடங்கியுள்ள அறக்கட்டளையின் மூலம் விருதுநகர் விழுப்பரம் அரியலூர் ஆகிய இடங்களில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களிலிருந்து அழைப்புகள் வருவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எல்லாரும் இணைந்தால் எதுவும் சாத்தியப்படும். என் பங்களிப்பிலிருந்து துவங்குகிறோம் நீங்களும் உதவிக்கரம் நீட்டுங்கள். கழிப்பறை வசதி இல்லையென்று இனி என் சகோதரி யாரும் படிப்பை நிறுத்தகூடாது’ என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள எந்த பள்ளிகளிலும் கழிப்பிடம் இல்லாத நிலை ஏற்படக்கூடாது என்று நோக்கத்தில் ஜீவி பிரகாஷ் இந்த செயலை செள்து வருகிறார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்