சென்னை லாட்ஜில் பிணமாக கிடந்த வெளிநாட்டுப் பெண்… தவிக்கும் காதலன்!

0
146462

பின்லேன்ட் நாட்டிலிருந்து காதலனுடன் சுற்றுலா வந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் உள்ள லாட்ஜில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

பின்லேன்ட் ஜோடி:
இப்பெண்ணின் பெயர் எமிலியா. தனது காதலன் அலக்ஸி ஜோயலுடன் இருவரும் தென்னிந்திய சுற்றுலாவுக்காக தமிழகம் வந்துள்ளனர். மகாபலிபுரம், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட சுற்றுலா தளங்களை கண்டு ரசித்துவிட்டு, சென்னை-திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் வாடகை அறை எடுத்து தங்கியிருந்தனர்.

போதை பழக்கம்:
இருவருக்கும் போதை மாத்திரைகளை உட்கொள்ளும் பழக்கம் இருந்துள்ளது. பின்லேன்ட் நாட்டில் குடிமக்கள் அனைவருக்கும் மிக எளிதில் கிடைக்கும் மாத்திரைகளாம் இவை. சகஜமாகவே அந்நாட்டு மக்கள் இந்த மாத்திரைகளை உட்கொள்வார்களாம். இந்த மாத்திரைகளை சென்னையில் உள்ள மருந்தகத்தில் வாங்கி சாப்பிட்டுள்ளனர். கடந்த 9ம் தேதி வழக்கம்போல இந்த மாத்திரைகளை உட்கொண்டுவிட்டு போதையில் கிடந்த எமிலியாவும், ஜோயலும் படுக்கையில் சாய்ந்தனர்.

எமிலியா மரணம்:
அடுத்த நாள் காலை ஜோயல் மட்டுமே கண் விழித்துள்ளார். எமிலியா உடலில் எந்தவித அசைவும் இன்றி படுத்திருந்தார். அவரது ஆடைகள் கலைந்திருந்தது. அதிர்ச்சி அடைந்த ஜோயல், எமிலியாவை எழுப்ப முயன்றுள்ளார், பிறகே அவர் மரணித்துள்ளதை அறிந்துள்ளார். பிறகு காவல்துறை வழக்கு பதித்து விசாரணை மேற்கொண்டது. போதை தர வல்ல பெயின் கில்லர் போன்ற மாத்திரைகளை அதிகம் உட்கொண்டதாக ஜோயல் விசாரனயின் போது தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணை:
எமிலியாவின் உடல் பின்லேன்ட் நாட்டிற்கு அனுப்பப்பட உள்ளது. ஜோயல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார். பின்பு இங்கே தமிழக போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சட்டப்படி வழக்கு பதிவாகி, பின்லேன்ட் நாட்டு போலீசாரிடம் அனுப்பி வைக்கப்படும். அயல் நாட்டிலிருந்து வந்த ஜோயல், தன் கையில் பத்து காசு கூட இல்லை என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்லேன்ட் நாட்டு தூதரகத்தின் உதவியுடன் இவர் நாடு திரும்புவார் என தகவல்கள் கிடைக்கின்றன.

ஏன் சந்தேகம்?
எமிலியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் ஜோயல் போலீசாரிடம் தெரிவித்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்கு காரணம் எமிலியாவின் ஆடைகள் கலைந்திருந்தது என அவர் தெரிவிக்கிறார்.

துப்பரவு பணியில் ரோபோக்கள்… பட்டையை கிளப்பும் பினராயி விஜயன்!