“பைனான்சியர் ரொம்ப நல்லவர்” ட்விட்டரில் கூறிய தேசிய விருது இயக்குனர்.

0
447

இயக்குனரும் நடிகருமான சசிகுமாரின் மேனஜரும் மைத்துனருமான அசோக்குமார், பைனான்சியர் அன்பு செழியனால் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு பிறகு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில் அவர் தன் தற்கொலைக் காரணம் பைனான்சியர் தான் என்று குறிப்பிட்டுள்ளார். பணம் கேட்டு அன்புச்செழியன் நெருக்கடி தருவதோடு, குடும்பத்து பெரியவர்கள், பெண்களையும் கடத்திச் சென்றுவிடுவதாக மிரட்டுவதாகவும் அசோக்குமார் தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அசோக்குமாரின் தற்கொலை வாக்குமூலக் கடிதத்தின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள அன்புச்செழியனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக திரைத்துறையினர் ஒன்று திரண்டுள்ளனர். அவர் மீது இயக்குனர்கள் அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இயக்குநர் சீனுராமசாமி

இந்நிலையில் தென்மேற்கு பருவகாற்று, தர்மதுரை படங்களின் இயக்குநர் சீனுராமசாமி அன்புச்செழியனுக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, போல் இல்லை இன்றைய நடிகர்கள். அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்பவது வேதனை. நான் நியாயத்தின் பக்கமே என்று குறிப்பிட்டுள்ளார். பெரும் அதிச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்