ஆதார் எண்ணை ரேசன் கார்டு உடன் இணைக்காததால் பசியில் இறந்த பெண்!

0
137

படித்த மக்களே தவறு செய்யும் போது படிக்காத பாமர மக்கள் என்ன செய்வார்கள். மத்திய அரசு ஆதாரை அனைத்து சலுகைகளும் பெற கட்டாயம் என அறிவித்தது. இதனால் மக்கள் தங்கள் ஆதார் எண்களை அனைத்துக்கும் இணைக்க தொடங்கினார்கள். இருப்பினும் கிராம புறங்களில் இன்னும் ஆதார் எதற்கு என்பது கூட தெரியாத மக்கள் உள்ளனர். உத்திர பிரதேசம் மாநிலத்தில் ஆதார் எண்ணை ரேசன் கார்டுடன் இணைக்காததால் அவருக்கு அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் மட்டுமே அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். ஷகினா ஆஸ்பாக் என்ற பெண் கடத்த ஒரு மாதமாக ரேஷன் கார்டையும் ஆதார் கார்டையும் இணைக்க முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். இவரது உடல் நிலை சரி இல்லாத காரணத்தை கூறியும் அவர்களுக்கு சென்ற மாதத்திற்கான உணவுப் பொருட்கள் மறுக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து ஷகினா ஆஸ்பாக் கணவர் முகமது ஆஸ்பாக் ரேஷன் ஊழியர்களிடம் சென்று ஷாகினாவின் நிலைமையை கூறி அழுது இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அங்கு இருந்து எல்லா ஊழியர்களின் காலிலும் அவர் விழுந்து கெஞ்சி இருக்கிறார். ஆனால் ஆதார் கார்டை இணைத்தால் மட்டுமே ரேஷன் தருவோம் என ஊழியர்கள் கண்டிப்பாக மறுத்து விட்டனர். ரேஷன் பொருட்கள் இல்லாததால் அந்த குடும்பம் உணவு சமைக்க முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறது. ஷகினா ஆஸ்பாக் இதன் காரணமாக தொடர்ந்து ஐந்து நாட்களாக சாப்பிடாமல் இருந்திருக்கிறார். வெறும் தண்ணியை மட்டுமே அவர் குடித்து வந்ததாக அவரது உறவினர்கள் கூறுகிறார்கள். மேலும் அவருக்கு இதன் காரணமாக திடீர் என்று உடல் நல குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையாக ஆகிவிட்டார் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் நேற்று மாலை கொடுமையான பசி தாங்க முடியாமல் மரணம் அடைந்தார். தற்போது அவர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த ரேஷன் கடை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் இந்தப் பிரச்சனை குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டு இருக்கிறார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்