பிறந்த தேதிய சொல்லுங்க, உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!

0
8390

நீங்கள் பிறந்த தேதியை வைத்தே உங்களுடைய குணம், வாழ்க்கை ஆகியவற்றை கணித்துவிடலாம். இங்கே தேதிகளும், அத்தேதிகளில் பிறந்தவர்களுடைய எதிர்கால வாழ்க்கையும் சிறுகுறிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 8-21 மற்றும் பிப்ரவரி 1-11:
இந்த தேதிக்குள் பிறந்தவர்கள் கடுமையான உழைப்பாளிகள். துணிச்சல், தன்னம்பிக்கை எல்லாம் இவர்களிடம் கிலோ கணக்கில் கொட்டிக்கிடக்கும். எந்த இடத்தில் சூப்பர் ஹீரோக்களாக இருப்பர். உதவி செய்வதில் கர்ணனாக, தனித்துவம் கொண்டவர்களாக இருப்பர். தனிமையே இவர்களின் நண்பன்.

மே 8-27 மற்றும் ஜூன் 29-ஜூலை 13:
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் உணச்சிவசப்படக் கூடியவர்கள். எதையும் சற்று வித்தியாசமான கோணத்தில் பார்ப்பார்கள். அவுட் ஆஃப் பாக்ஸ், அதாவது வித்தியாசமாக யோசித்து செயல்படுவர். கஷ்டத்தையும் நஷ்டத்தையும் தனக்கு சாதகமாக எடுத்துக்கொள்வார்கள். எல்லா பிரச்சினைகளுமே இவர்கள்தான் பிரச்சினையாக இருப்பார்கள். பிரச்சினைகளே இவர்களைக் கண்டு அஞ்சும். போட்டி என்றால் பந்தையக் குதிரைதான். தொட்டதெல்லாம் வெற்றிதான்.

ஜூலை 14-28, செப்டம்பர் 23-27 மற்றும் அக்டோபர் 3-17
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மிக அழகான வாழ்க்கையை கட்டமைக்க விரும்புபவர்களாக இருப்பர். கூச்ச சுபாவம் அதிகமாக இருக்கும். கூட்டம் என்றால் அலர்ஜி. எங்கே இருந்தாலும் தனிமை கேட்பவர்கள். நிறைய பயணிக்கக் கூடிய ஆட்கள். பொசசீவாக இருப்பர். வாயை திறந்தால் கவிதைகளாக கொட்டும். வானம் வரை எழுதுவார்கள்.

பிப்ரவரி 12-29 மற்றும் ஆகஸ்ட் 20-31:
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நம்பிக்கையின் சிகரமாக விளங்குவர். தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் சுற்றத்தின் மீதும் அதீத அக்கறை கொண்டவர்கள். சமூக சேவைகளில் சிறந்து திகழ்வர். பயங்கர சென்சிட்டிவ் என்றாலும் இவர்களிடம் ஊறியிருக்கும் அன்பையும், பாசத்தையும் லிட்டர் கணக்கில் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிக்கலாம். முன்கோபம் மிகுதியாக இருக்கும்.