தீபாவளி சிறப்பு பஸ்களுக்கு ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் முன்பதிவு!

0
120

தீபாவளி பயணத்திற்காக கோயம்பேட்டில் 26 கவுண்டர்கள் திறக்கப்பட்டு முன்பதிவு நடைப்பெற்று வருகிறது. தாம்பரம்-மெப்ஸ் பேருந்து நிலையத்தில் 2 கவுண்டர்களும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஒரு கவுண்டரும் திறக்கப்பட்டு டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக மொத்தம் 11,200 தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு, பூந்தமல்லி, அண்ணா நகர், சைதாபேட்டை, தாம்பரம் சேனிட்டோரியம் என ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்படுகின்றன.

நேற்று காலை முதல் இன்று காலை 9.30 மணி வரை மொத்தம் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 89 பேர் சொந்த ஊருக்குச் செல்ல அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் மொத்தம் 67 ஆயிரத்து 730 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

13ம் தேதியன்று பயணிக்க தமிழகம் முழுவதும் 19,739 பேரும், சென்னையில் இருந்து செல்ல 9,566 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். 14ம் தேதியன்று பயணிக்க சென்னையில் இருந்து செல்ல 9,540 பேரும், பிற மாவட்டங்களில் இருந்து 17,534 பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.

15ம் தேதியன்று பயணிக்க 15,071, சென்னையில் இருந்து 7,607 பேர் முன்பதிவு செய்துள்ளனர். 16ம் தேதியன்று மொத்தம் 31,29௪ பேர் பயணிக்க உள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் 19,973 பேர் முன்பதிவு செய்துள்ளனர். 17ம் தேதி பயணிக்க மொத்தம் 32,561 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் 21,052 பேர் முன்பதிவர்கள்.

இதனால் தமிழக அரசு போக்குவரத்து கழகத்திற்கு மொத்தம் ஒரு கோடியே எட்டு லட்சம் டுபாய் வருமானம் கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளுக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. முன்பதிவு செய்யம்போதே பயணிகளுக்கு குழப்பம் ஏற்படுத்தாமல் எந்த பேருந்து நிலையத்திற்கு, எதனை மணிக்கு வர வேண்டும் என்றும், பேருந்து புறப்படும் நேரமும் குறுந்தகவல் மூலம் அனுப்பட்டு வருகிறது.

தீபாவளி சிறப்பு பேருந்துகள் விவரம் – சென்னை!

உங்க கருத்தை தெரிவிக்கலாம்