பாக்யராஜும் தீவிர அரசியலுக்கு வருகிறார்!

0
129

நேரடி அரசியலில் ஈடுபட உள்ளதாக என்று இயக்குநரும், நடிகருமான கே.பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வருவது குறித்து பாக்யராஜ் கூறியதாவது:
இப்போது நான் அரசியலுக்கு நேரடியாக வர முடிவு செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இயக்குநர் பாக்யராஜ், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, அரசியலுக்கு நேரடியாக வரக்கூடிய வாய்ப்பும் காலமும் நெருங்கிவிட்டது. அந்த சூழல் எப்போழுது வேண்டுமாலும் வரலாம். அதைப்பற்றி தற்போது எதுவும் சொல்ல முடியாது. அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது.
கிட்டத்தட்ட, நேரடி அரசியல் குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பு வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். அதற்கான காலம், நீண்டகாலம் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். இன்னும் ஒருமாதத்திற்குள் முடிவைச் சொல்லுவேன். யாருக்கு ஆதரவு, ஏன் ஆதரவு என்றெல்லாம் அப்போது தெரியும். கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்