ஓகி புயல் எங்கே கரையை கடக்கும்? மழைக்கு வாய்ப்பு உள்ளதா?

0
1083

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 17௦ கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள ஓகி புயல் எந்த வழியாக சென்று கரையை கடக்கும் என்பது கணிக்கப்பட்டிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 17௦ கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள ஒகி புயல் எந்த வழியாக சென்று கரையை கடக்கும்.

எப்படி செல்கிறது?

அதாவது குமரிக்கு அருகே மையம் கொண்டிருந்த ஓகி புயல் வட மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கேரளாவில் ஓரிரு நாட்கள் மழையை கொடுத்துவிட்டு அது மேற்கு நோக்கி நகரும். இதுவரை புயல் நகர்ந்த தடத்தை வைத்து பார்க்கும்போது அது நிச்சயமாக தமிழகத்திலோ கேரளத்திலோ கரையை கடக்கப் போவதில்லை என அறிய முடிகிறது. இறுதியாக அது அரபிக்கடலை அடைந்து அங்கே வலுவை இழக்கலாம்.

மழை வாய்ப்பு:

புயல் வடமேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் நாளை வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்யலாம். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும். கேரளாவின் தென் மாவட்டங்களில் ஓரிரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரியில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

உங்க கருத்தை தெரிவிக்கலாம்