குமரி அருகே புதுசா ஒரு புயல் சின்னம்… பேர் ‘ஒகி’யாம்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

0
227

தமிழகத்தில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கன்னியாகுமரி கடற்கரையை நோக்கி இன்று அல்லது நாளை கரையை கடக்கும். இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றம் தமிழகத்தின் தென் பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது புயலாகவும் மாறும் என்று அறிவித்தனர். அதனால் அப்பகுதியை சுற்றி கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். தற்போது கன்னியாகுமரி அருகே நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலு பெற்று புயல் சின்னமாக உருப்பெற்றுள்ளது. ஒக்ஹி என்று அதற்கு பெயர் வைக்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை இலங்கைக்கு தெற்கே மற்றும் தென் கிழக்கு கன்னியாகுமரியில் இருந்து 500 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும். அதனால் கன்னியாகுமரியில் கனமழையும், திருச்செந்தூரில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்றும் வீசி வருகிறது.

வர்தா புயலை போல் ஒகி புயல் நிலப்பகுதியை கடக்காது என்றும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மக்கள் வெளியில் பயணம் செய்வது குறைத்துக் கொண்டு வீட்டியில் பாதுகாப்பாக இருக்கவும் வலியுறுத்தியுள்ளனர். மழை பெய்து வருவதால் மரங்களின் கீழ் வாகனம் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். கடல் கெந்தளிப்பாக இருப்பதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்