அது சென்னையை நோக்கிதான் வருது…. இர்மா புயல் எச்சரிக்கை…!

0
61259

அமெரிக்காவை சூறையாடிய சக்தி வாய்ந்த இர்மா புயலைப் போன்றதொரு மிகப்பெரிய புயல் சென்னையை நோக்கி வந்துகொண்டிருப்பதாக அதிர்ச்சி கர தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேயாட்டம் போட்ட இர்மா:

கடந்த ஞாயிறு அன்று அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான இர்மா புயலானது அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தை பயங்கரமாக துவம்சம் செய்தது. மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்த இந்த வெப்பமண்டல புயலால் பெரும்பாலான நகரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இர்மா புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை எண்பத்து இரண்டாக உயர்ந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் ஃப்ளோரிடாவில் முப்பத்திரண்டு பேரும், ஜார்ஜியா மற்றும் தெற்கு கரோலினாவில் ஏழு பேரும் உயிரிழந்தனர்.

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை:

புயலிலும், வெள்ளத்திலும் சிக்கி மின் இணைப்புகள் சிதந்துள்ளதால், சுமார் பதினோரு லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மியாமி நகரில் உள்ள முக்கியமான மருத்துவமனை ஒன்றில் மின்சாரம் இல்லாத காரணத்தினால், எட்டு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

சென்னைக்கு ஆபத்து:

இந்த இர்மா புயலைப் போலவே இன்னொரு புயல் நமது சென்னைக்கு குறி வைத்துள்ளதாக தமிழ்நாடு நில பயன்பாட்டு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய ஜெர்மைன் சஸ்டைனபிலிட்டி மையம் மற்றும் ஐ.ஐ.டி. சென்னை ஆய்வுக்குழுக்கள் ஒருங்கிணைவில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

உயரும் கடல்மட்டம்:

மேலும் அந்த ஆய்வில் அடுத்த முப்பது ஆண்டுகளில் சென்னை நகரில் உள்ள கடல் நீர் மட்டம் 4.35 மீட்டர் முதல் 6.85 மீட்டர் வரை அதிகரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக வலுவான புயல்கள், சூறாவளிகள் ஏற்படலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்தாண்டு தாக்கிய வர்தா புயலுக்குப் பிறகு சென்னை கடல் நீர் மட்டம் 3 மீட்டர் வர உயர்ந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதால் இர்மா புயலைப் போல சக்தி வாய்ந்த வேபமண்டல புயல் உண்டாகலாம் என்பது ஆய்வாளர்களின் கூற்றாக இருக்கிறது.