மெசேஞ்சர் மூலம் தாக்கும் வைரஸ் எச்சரிக்கை விடுக்கும் பேஸ்புக் நிறுவனம்!

0
63

நாம் மற்ற நண்பர்களுடன் பல தகவல்களுக்காக அதிகம் பயன்படுத்துவது பேஸ்புக் தான். அப்படி பேஸ்புக் பயன்படுத்தும் பலர் மெசேஞ்சர் பயன்படுத்துகின்றனர். தற்போது மெசேஞ்சர் மூலம் “டிஜிமைன் கிரிப்டோகரன்சி” என்ற வைரஸ் நமது கணியின் மொத்த செயல்பாட்டையும் முடக்கிவிடுகிறது. தென்கொரியாவில் இருக்கும் டிஜிமைன் என்ற நிறுவனம் “கிரிப்டோகரன்சி” என்ற வைரஸை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் பேஸ்புக் மெசேஞ்சர் மூலமாக பரவ கூடியது. நம்முடைய பேஸ்புக்கில் இருந்து இன்னொருவருக்கு நமக்கே தெரியாமல் இந்த வைரஸ் பரவும். மெசெஞ்சரில் வீடியோ போல இது வரும் இந்த வைரஸை திறந்து பார்த்தால் நம் கணக்கில் உள்ள நண்பர்கள் அனைவருக்கும் பரவி விடும். இந்த வைரஸ் இன்னும் சில நாட்களில் இந்தியாவை தக்க வாய்ப்பு இருக்கிறது பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை வியட்நாம், உக்ரைன், பிலிப்பைன்ஸ், தாய்லாந்த், வெனிசுலா ஆகிய சிறிய நாடுகளை தாக்கி இருக்கிறது. இந்த வைரஸ் நம்முடைய மொபைல் மெசேஞ்சர் அப்ளிகேஷனின் மூலம் பரவாது. மாறாக கணினியில் மெசேஞ்சர் பயன்படுத்தும் போது பரவும். முக்கியமாக கூகுள் குரோமில் மெசேஞ்சர் பயன்படுத்தினால் இந்த வைரஸ் பரவும். இந்த வைரஸ் பரவிய அடுத்த நொடி அதுவாக அப்டேட் ஆகி நமது பேஸ்புக் கணக்கை செயல் இழக்க வைக்கும் என்றும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. இந்த வைரஸ் தாக்கிய பின் முதலில் கூகுள் குரோமில் தானாகவே சில அப்டேட் செய்யும். இதனால் மெயில் உள்ள தகவல்கள் வெளியாகும். சில நாட்களில் கணினியின் செயல்பாட்டை குறைத்து அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்