வாவ்… இது சென்னையா? இல்ல ஊட்டியா?… 2௦ டிகிரிக்கு இறங்கிய வானிலை!

0
814

1௦௦ டிகிரிக்கு வெயில் வறுத்தெடுக்கும் சென்னையில் இப்போது 25 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், கடந்த திங்கட் கிழமை காலையில் நிலவிய வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ். இந்த ஆண்டிலேயே மிக குறைந்த வெப்பநிலை நிலவிய நாள் அது.

காலை மேலே சுற்றும் வானம் எல்லாம் நகரின் மீது படுத்து உறங்கிக் கொண்டிருந்தது போல உணர்ந்தார்கள் சென்னை வாசிகள். மெல்லிய கம்பி போல் பெய்யும் மழையையும், ஜில்லென்ற காற்றையும் என மாநகரமே அனுபவித்துக் கொண்டிருக்கிறது. சூழ்நிலைக்கு ஈடாக நாவிற்கு சற்று ரிலாக்ஸ் கொடுப்பதற்காக சூடான தேநீர் கோப்பைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கின்றன பலரது கைகள். ஊட்டியை போலொரு கிளைமேட் என சொல்லத் தோன்றுகிறது.

குமரி அருகே மையம் கொண்டிருக்கும் ஒகி புயல் சின்னத்தால் சென்னை மற்றும் லட்சத்தீவில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்று கனமழையும் பெய்ய வாய்ப்பு உண்டு என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என தொலைக்காட்சிப் பெட்டிகள் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றன.

மழையோ, குளிரோ எதுவானாலும் அதுவா? நானா? என பார்த்துவிடலாம் என மொபைலையும், கேமிராக்களையும் உயர்த்திக்கொண்டு சாலைகளில் பட்டம்பூச்சியாய் பறந்து கொண்டிருக்கிறார்கள் புகைப்படக் கலைஞர்கள். அவர்கள் க்ளிக்கிய சென்னையின் சில புகைப்படங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

சென்னை சாலைக் காட்சி

வாவ்... இது சென்னையா? இல்ல ஊட்டியா?... 2௦ டிகிரிக்கு இறங்கிய வானிலை!

திருத்தணி டோல்கேட் பகுதியில் பனி சூழ்ந்திருக்கும் அழகிய காட்சி

உயர்ந்த குடியிருப்பு கட்டடங்களை கடந்து செல்லும் பனி

காருக்குள் இருந்து ஓர் சாலைக்காட்சி

பனி போர்த்திய கட்டம்

அதிகாலையில் மெரீனா கடற்கரை

உங்க கருத்தை தெரிவிக்கலாம்