சிவகார்த்திகேயன், சந்தானம், மா.க.ப. வரிசையில் தற்போது ஜெகன்!

விஜய் தொலைகாட்சியில் தொகுபாளராக இருப்பவர்கள் பலரும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். விஜய் டிவியில் இருந்த சிவகார்த்திகேயன், சந்தானம், மா.க.ப.ஆனந்த் ஹிரோவாக நடித்து வருகிறார்கள்.  தற்போது அந்த வரிசையில் ஜெகன் இடம் பெற்றுள்ளார். இவர் அயன் கோ மரியான் உள்ளிட்ட நாற்பது படங்களில் நடித்துவிட்டார். காமெடியில் நடித்துக் கொண்டியிருந்த இவர் தற்போது ஹிரோவாக நடிக்க போகிறார். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல என்கிற படத்தில் ஹிரோவாக நடிக்கும் ஜெகனுக்கு ஜோடியாக ரஹானா நடிக்கிறார். படத்தில் வில்லனாக பாடலாசிரியர் பிறைசூடன் நடிக்கிறார். இப்படத்தை முருகலிங்கம் இயக்குகிறார். கதை திரைகதை வசனம் காரைக்குடி நாராயணன். ஒரு பசு மாடு காணமல் போகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்படுகிறது. இதையடுத்து அந்தப் பசுவைத் தேடும் போலீசின் அனுபவங்களும், புகார் கொடுத்தவரின் அலம்பல்களும் காமெடியாக சொல்லப்படுகிறது. ஜெகன் இந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரைத் தேர்வு செய்தோம் என்றும் படத்தை குறித்து இயக்குனர் தெரிவித்துள்ளார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்