மூடுவிழா காணும் கோலா ஆலைகள்… காரணத்தை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

0
1760

இந்திய சந்தையில் முதல் முறையாக சரிவை காண தொடங்கியிருக்கிறது. இதன் ஆரம்பமாக இருநூற்று ஐம்பது பேரை வேலையை விட்டு நீக்க கோக் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக முன்னணி ஆங்கில பத்திரிகை எழுதியிருக்கிறது.

பணி நீக்கம்:

இந்த பணி நீக்கத்தில் உயர் அதிகாரிகள், மத்திய தர அதிகாரிகள் என பலரது தலையும் சிக்கியுள்ளது என்றும், நிதியியல் பிரிவு, மனிதவளப் பிரிவுகளில் அதிக சம்பளம் பெறும் பணியாளர்கள் நீக்கப்படுகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிளைகளுக்கு மூடுவிழா:

அதே போல தனது அலுவலக கிளைகளின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாம் கோக் நிறுவனம். இப்படியான சூழலில் விற்பனையையும், விநியோக சங்கிலியை பலத்தப்படுத்திக்கொண்டு, குறைந்த சம்பளத்திற்கான பணியிடங்களை உருவாக்கவும் உள்ளது.

முடங்கிய ஆலைகள்:

கொக்கோ கோலா நிறுவனத்தின் இந்த முடிவிற்கு காரணம் கடந்த இரண்டு வருடங்களில் அஸ்ஸாம், மேகாலயா, ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம், தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள கோக் குளிர்பான தயாரிப்பு ஆலைகள் மூடப்பட்டதுதான் காரணம் என அந்த ஆங்கில பத்திரிகை தெரிவித்துள்ளது.

காரணம் என்ன?

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஒரு அங்கமாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட விழிப்புணர்வு மூலம் தமிழகம் முழுவதும் கோக் நிறுவன குளிர்பானங்களின் விற்பனை சரிந்தது. இவ்வகையான விழிப்புணர்வுகள் தொடர்ந்து பரவ பரவ நாடு முழுவதும் இவ்வகை குளிர்பானங்களை மக்கள் நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர். பல வெளிநாடுகளிலும் கூட கோக் நிறுவன பானங்களை மக்கள் நிராகரித்து வருகின்றனர். மேல்தட்டு மக்களும் கூட ஆரோக்கிய பானங்களை விரும்பி சுவைக்கத் தொடங்கியுள்ளனர் என்பது கூடுதலான நற்செய்தி ஆகும்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்