கோடம்பாக்கத்தில் இருந்து கோட்டைக்கு கிளம்பிய 5வது சிங்கம் ரஜினி!

0
25912

இன்று மோடி டிவிட்டரில் கட்சி வளர்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நமது தலைவர்கள் சுமார் ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்பே சினிமா என்னும் மாபெரும் அஸ்திரத்தை கையில் எடுத்துவிட்டனர். சினிமா மக்களை கொத்தாக கவரும் ஒரு ஆயுதமே. அந்த ஆயுதத்தின் ஊடாக கட்சியை வளர்த்தெடுத்தனர். கொள்கைகளை பரப்பினர். நாடக மேடைகளில் அரசியல் முழங்கினர். அப்படியான ஊடகங்களின் மூலமாக தமிழ்நாட்டிற்கு கிடைத்த முத்தான 4 தலைவர்களைப் பற்றி பார்க்கப்போகிறோம்.

1. சி.என். அண்ணாதுரை
திராவிட அரசியல் சகாப்தத்தின் மறக்க இயலாத தலைவரான இவர் பல வெற்றித் திரைப்படங்களுக்கு கதை எழுதியவர். ‘ரங்கோன் ராதா’, ‘குமரிக்கோட்டம்’, ‘பணத்தோட்டம்’, ‘ஓர் இரவு’, ‘ராஜ்பாட் ரங்கதுரை’ என பல திரைப்படங்கள் இவரது கதையே. மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.

2. மு. கருணாநிதி
தி.மு.க. தலைவரான மு. கருணாநிதியும் கோடம்பாக்கத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர்தான். ‘மந்திரக்குமாரி’, ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘பூம்புகார்’, ‘காலம் பதில் சொல்லும்’, ‘பெண் சிங்கம்’, ‘பொன்னர் சங்கர்’, ‘ உளியின் ஓசை’ மற்றும் தொலைகாட்சி நாடகம் ‘ராமானுஜன்’ என பல வெற்றிக்கதைகளை எழுதியவர் இவர்.

3. எம்.ஜி. ராமச்சந்திரன்:
நாடகங்களில் ஆர்வம் கொண்டு நடித்து வந்தவர், காந்தியின் சுதேசி கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் திராவிட அரசியலின் மீது அக்கறை கொண்டு தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பின்பு தமிழக அரசியலில் இணைந்தார். அ.தி.மு.க.வை தொடங்கி அசைக்க முடியாக தலைவராக திகழ்ந்தார். சினிமாவின் மூலமாக எண்ணற்ற தொண்டர்களை திரட்டினார்.

4. ஜெ. ஜெயலலிதா:
அ.தி.மு.க.வின் சகாப்தம் என்றே ஜெயலலிதாவை சொல்லலாம். எம்.ஜி.ஆருடன் இணைந்து அண்ணா திராவிட அரசியலின் கொள்கைகளை பரப்பி, மிகப்பெரிய அளவில் தொண்டர்களை திரட்டினார். தேசிய கட்சிகளுக்கு இணையாக டஃப் கொடுத்தத்தில் ஜெயலலிதாவை நான்கு வரிகளில் விவரிக்கவே முடியாது. சினிமாவில் இருந்து ஒரு பெண் கோட்டையை பிடித்த கதை தமிழகத்தில் மட்டுமே சாத்தியமானது.

 

இப்போது இந்த பட்டியலில் ரஜினிகாந்த் இடம்பிடித்துள்ளார். இன்று அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். அவர் கோட்டையை பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அரசியலில் சிவாஜிக்கு நேர்ந்த கதி ரஜினிக்கும் ஏற்பட வாய்ப்பு!

உங்க கருத்தை தெரிவிக்கலாம்