மெரினாவில் மழை வெள்ளத்தில் மூழ்கி முதியவர் பலி!

0
280

நேற்று மாலை முதல் சென்னையை வெளுத்துக் கட்டிய மழையால் நகரம் எங்கும் வெள்ளகாடாக காட்சி அளித்துக் கொண்டிருகிறது. குறிப்பாக கடலோரப் பகுதிகளும், தாழ்வான பகுதிகளும் பலத்த பாதிப்புகளை அடைந்துள்ளன. மெரீனா கடற்கரையில் வெள்ளம் தேங்கியிருக்கிறது. கடற்கரை கடல் போல் மாறியிருக்கிறது. கடற்கரை சாலை முழுவதும் மழை நீர் ஓடிக் கொண்டிருக்கிறது.

வெள்ள நீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மும்மரமாக ஈடுபட்டிருக்கின்றன. கடற்கரை சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தின் அருகில் 7௦ வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவரது உடல் வெள்ளத்தில் மிதப்பதைக் கண்ட சிலர் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றினர். அப்பக்கத்தில் வசிக்கும் மக்கள் அந்த முதியவர் பிச்சைக்காரர் என கூறியுள்ளனர்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்