உயர் நீதிமன்றத்தின் புதிய சட்டத்தால் ரசிகர்கள் கவலை!

0
97

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உயிரோடு இருக்கும் எவருக்கும் பேனர்கள் வைக்க கூடாது என்று. திருமணம், கட்சி கூட்டம், பிறந்தநாள் விழா, முன்னனி நடிகர்களின் புதிய படம் என அனைத்து நிகழ்ச்சிக்கும் பேனர்கள் கட் ஆவுட் போன்றவற்றை வைக்கும் பழக்கமாகி விட்டது. இதனால் பல விபத்துகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் பேனர் வைப்பதில் யார் அதிகம் வைப்பது என்ற பிரச்சனை, எதிர் எதிர் கோஷ்டிகள் பேனரை கிழிப்பதும், இதனால் கை கலப்பு வரை செல்வதும். காவல் துறையினருக்கு இது பெரிய தலைவலியாக இருக்கின்றது என்று சொல்ல வேண்டும். சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திருலோச்சன சுந்தரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனது வீட்டருகே ஏராளமான பேனர்களும், கட்சி விளம்பரங்களும் வைக்கப்படுவதால் தொல்லை ஏற்படுகிறது. மேலும் இதுகுறித்து காவல் துறையில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு மீது நீதிபதி வைத்தியநாதன் விசாரணை நடத்தினார். உயிருடன் உள்ளவர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இடம் பெறக் கூடாது என்று தமிழகதலைமை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு குறித்து தமிழகம் முழுவதும் சுற்றறிக்கை அனுப்புமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் தற்போது ரசிகர்கள் தங்கள் நடிகரின் படங்களுக்கு பேனர் வைக்க முடியாமல் போகும் என்று கலவையில் உள்ளனர்.

 

உங்க கருத்தை தெரிவிக்கலாம்