வரும் ஜனவரி 31ம் தேதி வரலாற்றில் மறக்க முடியாத நாளாக இருக்கும்! #BlueMoon

0
4877

வரும் 31ம் தேதியன்று வானில் தோன்றவிருக்கும் நிகழ்வால் அந்த நாள் வரலாற்றில் மறக்க இயலாத ஒரு நாளாக இருக்கும். ஏனெனில் அன்று நிலா நீல நிறத்தில் தோன்றும் என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நீல நிலவை ப்ளூ மூன் என ஆங்கிலத்தில் அழைப்பர். இந்த நீல நிலா எப்படி தோன்ற போகிறது? எங்கே இருந்து தெரியப் போகிறது? என்பதை பார்ப்போம்.

இரண்டு முறை:
ஒரு மாதத்தில் இரண்டு முறை முழு சந்திரன் தோன்றினால் இரண்டாவது முறை தோன்றும் பூரண சந்திரனானது ப்ளூ மூன் என அழைக்கப்படும். சந்திர நாள்காட்டியில் ஒரு சுற்று முடிந்து பூரண நிலவு அடுத்தமுறை தோன்ற 29 நாட்கள் இடைவெளி எடுத்துக்கொள்ளும்.

பௌர்ணமி:
ஆனால் ஒரு மாதத்தில் 30 அல்லது 31 நாட்கள் இருப்பதனால் சில சமயங்களில் ஒரே மாதத்தில் இரண்டு பூரண நிலவு தோன்றும். அதாவது இரண்டு பௌர்ணமிகள் ஏற்படும். இப்படியான நிகழ்வே இந்த 2018ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் நடக்கிறது.

ப்ளூ மூன்:
இம்மாதத்தின் முதல் நாள், ஜனவரி 1ம் தேதியன்று பௌர்ணமி நாள் ஆகும். பிறகு வரப்போகும் 31ம் தேதியன்று மற்றொரு பூரண சந்திர நாள், பௌர்ணமி தோன்றுகிறது. இந்த இரண்டாம் பௌர்ணமியில் தோன்ற உள்ள நிலவே ப்ளூ மூன் என அழைக்கப்படுகிறது.

நீல நிறத்தில் இருக்குமா?
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த அரிய நாளில் தோன்றும் ப்ளூ மூன் நிலவு சில நேரங்களில் உண்மையாகவே நீல நிலத்திலும் தோன்றலாம்.

உங்களுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திப்போகுதா? இந்த 4 விஷயத்தை ட்ரை பண்ணுங்க!

1000 வருட பழைமையான மகான் ராமானுஜரின் உண்மையான திருவுடல்!

உங்க கருத்தை தெரிவிக்கலாம்