போஸ்டரிலே இவ்வளவு நெருக்கமா? பிக்பாஸ் ரைசா மற்றும் ஹரிஷ் படத்தின் பெயர் இதுதான்!

0
455

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தற்போது அவர்களை தேடி பட வாய்ப்புகள் அதிகம் வந்து கொண்டியிருக்கிறது. பிக்பாஸ் ஓவியா, ஆரவ், ரைசா, கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் கல்யாண், சுஜா போன்ற பலருக்கும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. இதில் நிகழ்ச்சியால் மக்கள் மனதில் மிக எளிதாக இடம் பிடித்த இவர்கள் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்கள். இதில் ரைசாவும் ஹரிஷ் கல்யாண் இருவரும் ஜோடி சேர்ந்து படத்தில் நடிப்பதாக இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி இவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்று சொல்லலாம். பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தவர் ரைசா. யார் எதை சென்னாலும் கேட்டாலும் அதற்கு பட்டும்படாமலும் பேசி விடுவார். அவர் மாடலாக இருந்ததால் எப்போழுதும் மேக்கப் போட்டுக்கொண்டே இருப்பார். அதை கமல்ஹாசனே கிண்டல் செய்தாலும் கூட பெரிதாக கண்டு கொள்ளமாட்டார். அதை போல் இன்னொருவர் ஹரிஷ் கல்யாண். ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர். பிறகு ‘பொறியாளன்’ மற்றும் ‘வில் அம்பு’ படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தவர். இப்போது ரைஸாவுடன் இணைந்து ஒரு லவ் சப்ஜெக்ட் படத்தில் நடிக்க உள்ளாராம். இயக்குனர் இளன் இந்த படத்தை இயக்க உள்ளார், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகின. தற்போது இப்படத்தின் பெயர் மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ‘பியார் பிரேமா காதல்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் இருவரும் முத்தமிட போவது போல பர்ஸ்ட்லுக்கும், இருவரும் டாம் & ஜெர்ரி போலவும் நடுவில் யுவன் கிட்டாருடன் நிற்பது போன்ற பர்ஸ்ட்லுக்கும் வெளியாகியுள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்