பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளர் ஆனார் பிக்பாஸ் ஜூலி!

0
316

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமான ஜூலி. இந்த போரட்டத்தால் வீரதமிழச்சி என்றெல்லாம் புகழப்பட்டவர். பின் உலக நாயகன் கமல் தொகுத்துவழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு. தன் இதுவரை பெற்ற நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாள் நிறைவடைந்து சில மாதங்கள் ஆனாலும் இன்னும் சிலர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தாக்கத்தை விட்டு வெளியே வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எங்கு சென்றாலும் ஜூலியை திட்டிவருகின்றனர் என்பது தான் உண்மை. இருப்பினும் தைரியமாக எதிர்த்து, தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார். அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது கூறியபடி தற்போது தொகுப்பாளராக ஆகிவிட்டார். இதற்கு முன் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிவர். கலைஞர் தொலைக்காட்சியில் புதியதாக தொடங்க இருக்கும் நிகழ்ச்சிக்கு அவர் தான் நிகழ்ச்சி தொகுப்பாளர். திங்கள் முதல் வெள்ளி வரை அவரது நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறதாம். அந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கலா மாஸ்டர் மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்