இயக்குனர் சரவணன் படத்தில் ஹிரோ ஆனார் பிக்பாஸ் ஆரவ்!

0
265

ஆரவ் மாடலாக இருந்து பின் சினிமாவில் நுழைந்து சைத்தான் படத்தில் விஜயலட்சுமி கதாபாத்திரத்தின் கள்ளக்காதலானாக நடித்தார். ஆனால் தமிழ் சினிமா அவரை கண்டுகொள்ளவில்லை. பட வாய்ப்பும் வர வில்லை. பின் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 100 நாள் வீட்டில் இருந்து வெற்றிப் பெற்றார் ஆரவ். அனைவரும் சினேகன் அல்லது கணேஷ் வெங்கட்ராமன் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆரவ் வெற்றி பெற்றார். அதன் பிறகு படத்தில் விரைவில் நடிப்பேன் என கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒவியாவுடன் நடிப்பிர்களா என்று கேட்டதற்கு நிச்சயம் நடிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார். பலரும் ஆரவிடம் கதை சொல்லியிள்ளனர். நல்ல கதைக்காக காத்திருந்த ஆரவ், தற்போது ஒரு கதையை ஒகே செல்லியுள்ளார். இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் சிலம்பாட்டம் படத்தின் இயக்குனர் சரவணனின் படத்தில் நடிக்கப் போவதாகவும், அதனை  விஜயபார்கவி என்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ஆரவ் ரசிகர்கள் விரைவில் சினிமாவில் பார்க்கப் போவது மகிழ்சியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்