வாழைபழத் தோலில் புதிய ஆராய்ச்சி… வியப்பில் ஆழ்த்தும் தகவல்!

  0
  473

  வாழை மரம் அதன் இலை, பூ, காய், தண்டு, கிழங்கு என அனைத்து பாகங்களும் நமக்கு நன்மை தர கூடியது என நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக வாழைப்பழம் உடல் ஆராக்கியத்துக்கு மிகவும் இன்றியமையாததாகவே உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள அமினோ ஆசிட்டுகள் அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடுவார்கள். இதனால் அலர்ஜி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

  இரும்பு சத்து

  அதுமட்டுமில்லாமல் அதிக அளவு இரும்பு சத்து இருக்கிறது. இதனால் உடல் வலிமை பெறுவதோடு இரத்த சோகை நீங்கி இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலை உடனடியாகக் கொடுக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும். மலசிக்கல் முளை சுறு சுறுப்புக்கு காரணமாகவும் வாழைப்பழம் முக்கயமானதாக இருக்கிறது. சிறுநீரக பிரச்சனைகளுக்கும் இது தீர்வாக உள்ளது. அப்படி உடலின் அனைத்து பிரச்சனைகளும் வாழை தீராக இருக்கிறது. சமீபத்தில் நடத்திய ஆய்வின் முடிவில் வாழைப்பழ தோலும் நன்மை தர கூடியாதக உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  தண்ணீரை சுத்தப்படுத்த

  பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் ஆராய்ச்சியை மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினார்கள். நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம் என்று அவர்களின் ஆய்வறிகையில் கூறியுள்ளனர்கள். வசதி படைத்தவர்கள் மட்டுமே தண்ணீரை சுத்தபடுத்த கருவிகளை வாங்குகின்றனர். ஆனால் ஏழை எளிய மக்கள் அந்த அசுத்தமான நீரையே பருகிவரும் சூழல் உள்ளது. அதனை போக்கும் வகையில் தற்போது இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இனிமே யாரும் வாழைபழத்தை மட்டும் சாப்பிட்டு தோலை கீழே போடமாட்டார்கள்.

  SHARE

  உங்க கருத்தை தெரிவிக்கலாம்