ரஜினியை விட அக்ஷய் குமாருக்கு தான் அதிகம்!

0
329

ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரண்டமாக உருவாகி கொண்டியிருக்கிறது ‘2.0’ படம். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் போன்றோர் இப்படத்தில் நடிக்கின்றனர். 3டி தொழில்நுட்பத்துடன் இப்டம் தயாரிக்ப்படுகிறது. இப்படத்தின் இசை வெளியிட்டு விழா துபாயில் மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்றது. ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் படத்திற்காக பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுவிட்டது. பொங்களுக்கு இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கிராபிக்ஸ் தொழிநுட்பத்தால் படம் வெளியாகுவது தள்ளி போகும் நிலையில் உள்ளது. படம் 150 நிமிடங்கள் தான் என்று ஏற்கெனவே தகவல்கள் வந்தது. இப்படத்தில் வில்லனாக நடிக்கும் அக்ஷய்குமாருக்கு மொத்தம் 12 கெட்டப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் ரஜினி சிட்டி, வசீகரன் என்று இரண்டு வேடத்தில் நடித்திருப்பார். தற்போது ‘2.0’ படத்தில் அக்ஷய் குமாருக்கு 12 கெட்டப் என்ற தகவல் ரசிகர்களுக்கு இன்னும் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்