நடிகர் சங்க கட்டிடத்திற்கு அஜித் கூறிய கருத்து… பிரபல நடிகர் வெளிடட்ட தகவல்!

0
1281
நடிகர் சங்க கட்டிடத்திற்கு அஜித் கூறிய கருத்து... பிரபல நடிகர் வெளிடட்ட தகவல்!

நடிகர் சங்கத்திற்காக கட்டிடம் கட்ட நிதி திரட்ட நடிகர் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி, நட்சத்திர விழா நடத்துவது போன்றவறை்றை செய்து வருகின்றனர். மலேசியாவில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு பலரை நடிகர் சங்கம் சார்பில் அழைப்புகள் விடுக்க வில்லை என்று ராதிகா சரத்குமார் எஸ்வி சேகர் போன்றோ தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தனர். சென்னை விமான நிலையம் வரை வந்து பலரையும் திருப்பி அனுப்பபட்டனர் என்றும் செய்திகள் வெளியாகின. அதுமட்டுமில்லாமல் விஜய் அஜித் விக்ரம் போன்ற முன்னனி நடிகர்களையும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் நட்சத்திர விழாவுக்கு அழைப்பு விடுத்தபோது நடிகர் அஜித், மக்கள் கொடுக்கும் தியேட்டர் டிக்கெட்டில் இருந்துதான் நாம் சம்பாதிக்கிறோம். அதனால் நடிகர் சங்க கட்டடத்துக்கு நாமே நிதி அளிக்கலாம் என்று அவர் கூறியதாக நடிகர் எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்.