ஒரு ரூபாய் இருந்தால் நீங்களும் விமானத்தில் பயணிக்கலாம்… மீண்டு(ம்) வருகிறது ஏர் டெக்கான்!!

0
6709

பல வருட இடைவெளிக்குப் பிறகு ரீ-எண்ட்ரீ கொடுத்துள்ளது ஏர் டெக்கான் நிறுவனம். இதை கொண்டாடும் விதமாக டெக்கான் விமானத்தில் பயணிக்க குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ஒரு ரூபாய் முதல் ஆரம்பிக்கும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு ரூபாய் இருந்தால் நீங்களும் விமானத்தில் பயணிக்கலாம்... மீண்டு(ம்) வருகிறது ஏர் டெக்கான்!!

கேப்டன் கோபிநாத்:

ஏழை எளியவர்களையும் கூட விமானத்தில் பயணம் செய்ய வைத்தவர் கேப்டன் கோபிநாத். ஏர் டெக்கான் என்ற விமான சேவையை வழங்கி வந்தவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட, தனது நிறுவனத்தையும், விமானங்களையும் விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் நிறுவனத்திற்கு விற்றார். இது 2௦௦8ம் ஆண்டு நடந்தது.

ஒரு ரூபாய் இருந்தால் நீங்களும் விமானத்தில் பயணிக்கலாம்... மீண்டு(ம்) வருகிறது ஏர் டெக்கான்!!

கெட்டுப்போன கிங்ஃபிஷர்:

கோபிநாத்தின் விமானங்களை வாங்கிய மல்லையா, அதற்கு கிங்ஃபிஷர் ரெட் என்ற பெயரை மாற்றியதுடன், டிக்கெட் விலைகளையும் தாறுமாறாக ஏற்றினார். விலையேற்றத்தால் ஏழைகளுக்கு விமானப் பயணம் என்பது மீண்டும் எட்டாக்கனி ஆகியது. பின்னாளில் சரியான நிர்வாகத்திறன் இல்லாத காரணத்தால் கிங்ஃபிஷர் ரெட் நிறுவனத்தை ஊற்றி மூடினார் மல்லையா.

ஒரு ரூபாய் இருந்தால் நீங்களும் விமானத்தில் பயணிக்கலாம்... மீண்டு(ம்) வருகிறது ஏர் டெக்கான்!!

மீண்டு வந்த டெக்கான்:

மல்லையாவுடன், கோபிநாத் செய்துகொண்ட புதிய பயணிகள் விமானத்தை இயக்க மாட்டேன் என்ற ஒப்பந்தம் இந்தாண்டு இறுதியுடன், அதாவது டிசம்பர் மாத இறுதியுடன் தேதியுடன் முடிவிற்கு வருகிறது. கோபிநாத் மீண்டும் பயணிகள் விமான சேவையை துவக்க உள்ளார். இவரது நிறுவனத்திற்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு ரூபாய் இருந்தால் நீங்களும் விமானத்தில் பயணிக்கலாம்... மீண்டு(ம்) வருகிறது ஏர் டெக்கான்!!

2௦ நகரங்களில் அனுமதி:

ஏர் டெக்கான் விமானங்கள் இந்தியாவிற்குள் பெங்களூரு, மதுரை, கோவை, மும்பை, டெல்லி, குவஹாத்தி, கோவா, டெல்லி, கொல்கத்தா, ஷில்லாங் என 2௦ பல்வேறு இடங்களுக்கு பறக்க உள்ளன. முதல் ஏர் டெக்கான் விமானம் டிசம்பர் 22ம் தேதியன்று மும்பையில் இருந்து நாசிக் நோக்கி பறக்க தயாராக உள்ளது. “simplify” என tagline வரியுடன் மீண்டும் ரீ-எண்ட்ரீ ஆகிறது டெக்கான். இந்த விமான நிறுவனத்தின் லோகோவை பிரபல கார்ட்டூனிஸ்ட்டான ஆர்.கே. லக்ஷ்மன் வடிவமைத்துள்ளார். கோபிநாத்தின் முன்னாள் பணியாளர்கள் புத்துணர்ச்சியுடன் பணிக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

ஒரு ரூபாய் இருந்தால் நீங்களும் விமானத்தில் பயணிக்கலாம்... மீண்டு(ம்) வருகிறது ஏர் டெக்கான்!!

விலை ரூ. 1 மட்டுமே:

முந்தி வரும் விமான பயணிகளுக்கு விமானத்தில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டின் விலை வெறும் ஒரு ரூபாயாக இருக்கும் என ஏர் டெக்கான் அறிவித்துள்ளது. சாதாரண டிக்கெட்டின் விலை குறைந்தபட்சம் ரூ 1,4௦௦ல் இருந்து தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை… சீறிப்பாய தயாராகும் காளைகள்!

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்