ஆந்திரா அரசுக்கு அடிச்சது இராஜ யோகம்… புதையல் தேடி போய் வைர மலையே கண்டுபிடிப்பு!

0
15141

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் துங்கிலி மண்டலம் சென்னபம்பள்ளியில் அரவீடு திம்மராஜா என்பவர் 100 ஏக்கர் பரப்பளவில் மலையை குடைந்து சென்னம்பள்ளி கோட்டையை 16 நூற்றாண்டில் கட்டினார். அவருக்கு பிறகு குத்திராஜா, விஜயநகர அரசர்கள் ஆட்சியின் கீழ் இந்த கோட்டை இருந்து. போர்ச்சுகீசியர்கள் போர் தொடுதத்த வந்தபோது மன்னர் கோட்டையில் உள்ள சுரங்கத்தில் தங்க வைர போன்ற விலையுர்ந்த புதையலை பதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக இந்த புதையலை எடுக்க பலர் முயற்சி செய்தும் முடியவில்லை. இந்நிலையில் ஆந்திர மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கோட்டையில் புதையல் இருப்பதை உறுதி செய்து அரசுக்கும் தெரிவித்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம்தேதி புதையலை எடுக்க தொல்லியியல் துறை திட்ட இயக்குனர் விஜயகுமார், சுரங்கத்துறை உதவி இயக்குனர் நடராஜன் மற்றும் கர்னூல் மாவட்ட எஸ்.பி. கோபிநாத் ஜெட்டி தலைமையில் அதிகாரிகள் புதையல் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த ஒரு மாதமாக புதையலுக்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. இதற்கா சென்னூர் கோட்டையை சுற்றிலும் 3 இடங்களில் சுரங்கம் தோண்டப்பட்டு ஆய்வுகள் மேற்க்கொள்ளப்பட்டன. இதில் யானைகளின் தந்தம், குதிரைகளின் எலும்புகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. இது எந்த காலத்தை சேர்ந்தவை என தொல்லியியல் துறை அதிகாரிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து கிணறு வழியாக ஸ்கேனர் கருவிகளை கொண்டு அதிகாரிகள் ஸ்கேன் செய்தனர். இதில் கோட்டைக்கு செல்லும் வழியில் இருந்த தர்கா அருகே மலைப்பகுதியில் வைர மலை இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த வைர மலை 12 மீட்டர் உயரத்துக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அனுமதியை பெற்று இந்த வைர மலையில் இருந்து வைரத்தை பிரித்தெடுக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதயலை தேடி சென்றவர்களுக்கு வைர மலையே கிடைத்திருப்பது பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அங்கு மலையை சுற்றிலும் பலத்த போலிஸ் பாதுகப்பு போடப்படுள்ளது.

போகியன்று கிராமங்களில் ஒப்பாரி வைப்பதற்கும், புத்தருக்கும் உள்ள ரகசிய சம்மந்தம்!

வியக்கவைக்கும் கோலங்கள், மெகந்தி, ஓவியங்கள்… ஃபேஸ்புக்கில் கலக்கும் இளைஞர்!

உங்க கருத்தை தெரிவிக்கலாம்