கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட நடிகர் சசிகுமாரின் மேனஜர்!

0
222

கந்துவட்டி கொடுமையால் சமிபத்தில் ஒரு குடும்பமே நெல்லை மாவட்ட ஆட்சிளர் அலுவலகம் முன்பு தீ குளித்து இறந்து போனர்கள். அதில் அவர்களின் சிறு குழந்தைகளும் தீயில் கருகின. இந்த சம்பவம் தமிழத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. அந்த சம்பவம் நடந்து சில நாட்களில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. பிரலபல சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகருமான சசிக்குமாரின் மேனேஜர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகுமாரின் அத்தை மகன் மற்றும் சசிகுமார் கம்பெனியின் மேனேஜர். சசிகுமார் தயாரிக்கும் படங்களின் இணைத் தயாரிப்பாளரும் அசோக்குமார். சினிமா பைனான்சியர், விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் மதுரை அன்புச் செழியனின் வட்டி சித்திரவதை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக அசோக்குமார் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இதன்பேரில் மதுரை அன்புச் செழியனைக் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு இயக்குநர் சசிகுமார், அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் இன்று மாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட வளசரவாக்கம் போலீசார், அசோக்குமாரை தற்கொலைக்குத் தூண்டியதாக இபிகோ 306வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதனை கந்து வட்டி ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல், தற்கொலைக்குத் தூண்டிய பிரிவின் கீழ் மட்டும் பதிவு செய்துள்ளனர் போலீசார்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால்

இது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் பத்திரிக்கைக்கு அளித்த போடியில், கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம்.எந்தவித அச்சுறுத்தலோ மிரட்டலோ இருந்தால் உடனடியாக எங்களை அணுகவும். காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள். இது தற்கொலை அல்ல கொலை. இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்து வட்டி கொடுமைக்கு அசோக்குமார் உயிரிழப்பே கடைசியாக இருக்க வேண்டும். இவ்வாறு விஷால் கூறியுள்ளார். அன்புசெழியன் தற்போது தலைமறவாகியுள்ளார். அவரை போலிஸார் தனி படை அமைத்து தேடி வருகின்றனர்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்