ஜெயலலிதா கொண்டுவந்த முத்தான 15 திட்டங்கள்… முன்னேறிய தமிழகம்!

0
347

ஜெயலலிதா தமிழகத்தில் சிறந்த மாநிலமாக மாற்ற பல நல்ல திட்டங்களை  கொண்டு வந்தார். இவை எழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும், ஆரோக்கியத்தையும் கருத்தில்கொண்டு பல திட்டங்களை கொடுத்துள்ளார். தமிழத்தில் முதலமைச்சராக பதவியேற்ற ஒவ்வொரு முறையும் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயலாற்றியுள்ளார். அவரின் சிறப்பான திட்டங்கள் இங்கே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

 

தொட்டில் குழந்தை திட்டம்1) தொட்டில் குழந்தை திட்டம்:
பெண் குழந்தைகளை கள்ளிபால் ஊற்றி கொல்வதை தடுக்க அரசு தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டுவந்தார்.

 

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்

2) பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்:
1992 ஆம் ஆண்டு பெண்குழந்தை பிறந்தால் வாங்கி கணக்கில் ரூ 25,000 முதல் ரூ 50,000 வரை வைப்புதொகையால் பல லட்சம் பெண்கள் பயனடைந்தார்கள்.

 

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்

3) மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்:
படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரம் மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் என் அறிவித்தார்.

 

இலவச சானிட்டரி நாப்கின்

4) இலவச சானிட்டரி நாப்கின்: 
2012-ம் கிராமங்களில் உள்ள 10 முதல் 19 வயது வரையிலான இளம் பெண்கள், மாணவிகள், இல்லத்தரசிகள் மற்றும் சிறைச்சாலையில் இருக்கும் பெண் கைதிகளுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

 

பெண்களுக்கான உடல் பரிசோதனைத் திட்டம்

5) பெண்களுக்கான உடல் பரிசோதனைத் திட்டம்:
அரசு அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் உடல் எடையை கண்காணித்து, அவர்கள் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய ஊட்டச்சத்து மாவு வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்

மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம்

6) மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம்:
கிராமப்புற, நகர்ப்புறப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தரப் பெண்கள் சுயமாக முன்னேறவும், மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய அளவில் அதிக பெண் சுயதொழில் முனைவோர் உள்ள மாநிலமாக தமிழகம் முதலிடம் பிடித்ததில், இத்திட்டத்துக்குப் பெரும் பங்கு உண்டு

 

பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை திட்டம்

7) பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை திட்டம்:
அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில், தாய்மார்கள் பாலூட்டுவதற்கு என பிரத்யேக தனியறைகளை அமைத்துக்கொடுத்தார் ஜெயலலிதா.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்