இந்த 6 காரணங்களால் மக்களுக்கும் ‘தலை சுத்துது’ ரஜினிகாந்த்!

0
6716

ரஜினி திரைப்படங்களில் பேசிய எத்தனையோ வசனங்கள் பிரபலமாகியுள்ளன. ஆனால் அரசியலுக்கு வந்தப் பின்னர் மேடையில் அவர் உளறிக்கொட்டிய வார்த்தைகள் பிரபலமாகி வருகின்றன. ‘எனக்கு அப்டியே தலை சுத்திப் போச்சு’ இதுதான் இப்போது சமூக ஊடகங்களில் ட்ரென்ட். அவரது பேச்சுக்களால் மக்களுக்கும் தலை சுற்றி போகிறது. அதன் முக்கியமான 8 காரணங்களை இங்கே பார்ப்போம்.

#1 மீடியா அலர்ஜி:
ரஜினிக்கு மீடியாக்கள் என்றாலே அலர்ஜிதான். பத்திரிக்கையாளர்களை அடிப்பேன் என அவரது திருமணத்தின்போது வெளிப்படையாகவே சொன்னார். அப்போது ரஜினியின் மீது பல பேனாக்கள் பாய்ந்தன. பின்னர்தான் தன் மீது மீடியா வெளிச்சம் படாமல் பார்த்துக்கொண்டார். இப்போது அரசியலுக்கு வரும்போதும் கூட மீடியாவிக் கண்டு அஞ்சுகிறார். மீடியாக்களை பார்த்ததும் தலை சுற்றுகிறது என்கிறார். உண்மையில் மீடியாக்களுக்குத்தான் தலை சுற்றுகிறது.

#2 ஆன்மீக அரசியல்:
சாதி அரசியல், மத அரசியல், பணநாயக அரசியல் என பல வெரைட்டிகளை தமிழக மக்கள் பார்த்துள்ளனர். ஆனால் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலை புரிந்துகொள்ள எவராலும் முடியவில்லை. ஆன்மீகம் என்றால் எந்த மாதிரியான ஆன்மீகமாக இருக்கும்? அது அப்படி சாமானிய மக்களுடைய வாழ்வியலுக்கும், நாட்டின் அரசியலுக்கும் ஒத்துப்போகும் என இமியளவும் கணிக்கமுடியாமல் தலை சுற்றுகிறது.

#3 ரஜினி மன்றம்:
அரசியலில் இறங்கியுள்ளேன். கட்சி தொடங்குகிறேன். எல்லோரும் வந்து இணைந்துவிடுங்கள் என கல்யாணத்திற்கு அழைப்பது போல அழைக்கிறார் ரஜினிகாந்த். ஒரே நாளில் ஒரு கோடி உறுப்பினர்களை கூட மன்றத்தில் சேர்த்துவிடலாம். ஆனால் மன்றத்தின் செயல்பாடுகள், குறிக்கோள்கள், நோக்கங்கள் பற்றி எந்த இடத்திலும் தெளிவான வரைமுறைகளை வழங்காததால் மக்களின் தலை சுற்றுகிறது.

#4 நோ டென்ஷன்:
அரசியலுக்கு வருவது அவரவர் உரிமைதான். ஆனால் மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இதுவரை எள்ளளவும் கூட தலையிடாமல் இருந்துள்ளார் ரஜினி. அட்லீஸ்ட் கருத்தாவது தெரிவித்திருக்க வேண்டும் என வெம்புகின்றனர் மக்கள். போராட்டங்கள் நடத்திட தனிக் கூட்டம் இருக்கிறது என்கிறார். அடுத்த வரியில், தமிழகத்தில் புரட்சி வேண்டும் என்கிறார். போராட்டம் இல்லாமல் புரட்சி எங்கேதான் விளையும்? இதை கேட்கும்போதே நமக்கு தலை சுற்றுகிறது.

ரஜினிகாந்த்#5 கொள்கையா?
அரசியல் பிரவேசத்தின் முதல் அஸ்திவாரமே கொள்கைகளாக தானே இருக்க வேண்டும்? இவரிடம் உங்கள் கொள்கை என்ன சார்? என்று கேட்டால், என்ன… கொள்கையா? என்று திரும்பி நம்மை கேள்வி கேட்டு தலை சுற்ற விடுகிறார். ஓரு அரசியல்வாதி ஊழல் செய்யாமல் கூட இருந்திடலாம்; ஆனால் கொள்கை இல்லாமல் அவர் ஒரு அரசியல்வாதியாக இருக்கவே முடியாது.

#6 உள்ளாட்சி தேர்தல்:
ரஜினிகாந்த் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு, தனது இயக்கத்தின் வலிமையை நிரூபித்துவிட்டு பிறகு சட்டமன்ற தேர்தலில் துணிச்சலாக போட்டியலாம். ஆனால் மனுஷன் நேராக சட்டமன்றத்தை நோக்கியே குறி வைக்கிறார். விஜயகாந்த் அரசியலுக்கு வரும்போது கூட அவர் உள்ளாட்சி தேர்தலில் தனது இயக்கத்தின் வலிமையை நிரூபித்துக் காட்டினார். பிறகுதான் சட்டமன்ற தேர்தலில் துணிச்சலாக இறங்கினார். மக்களும் அவர் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெறச் செய்தனர். ரஜினியின் இந்த அரசியல் முடிவானது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சிஸ்டத்துக்கே தலை சுற்ற வைக்கிறது.

இன்றைய அரசியல் சூழலில் இப்படியான பல விஷயங்களில் நம்முடைய தலையை உருட்டி விடுகிறார் ரஜினிகாந்த். அரசியலுக்குள் வரவேண்டும் என்றால் இத்தனைக்கும் தயாராக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு அரசியலில் எப்படி வேண்டுமானாலும் நீச்சல் போடலாம் என அவர் எண்ணிவிடக் கூடாது. முறையான பிடிப்புகளுடன் அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும். ரஜினி அப்படி முறையாக செய்திருந்தால் இத்தனை கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் சம்பாதித்திருக்க மாட்டார்.

2018ல் இந்த 3 பேரழிவுகள் நடக்கும்…. நோஸ்ராடாமஸ் குறிப்புகள்!

உங்க கருத்தை தெரிவிக்கலாம்