ஷாக்: ஆதார் விவரங்களை திருடி விற்கும் கும்பல்… இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட குழுக்கள்!

0
218

ஆதார் அட்டை ஒல்வொரு குடிமகனும் அவசியமாக இருந்து வரும் சூழலில், அரசின் அனைத்து சலுகைகளுக்கும் முக்கிய ஆதாமாக இருக்கும் ஆதார் கார்ட் தனி மனித விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று அரசு தெரிவித்தது. ஆனால் 500 செலுத்தினால் போதும் எந்த நபரின் ஆதார் விவரங்கள் கூட 10 நிமிடத்தில் கிடைத்துவிடுகிறதாம்.

பஞ்சாப்பில் இருக்கும் ஒருவர் இந்த வாட்ஸ்ஆப் குருப்பின் மூலம் இந்த மோசடியை செய்து வருகிறார். ஆங்கில பத்திரிக்கையில் பணிபுரியும் பெண் நிருபர் இதை கண்டுப்பிடித்து அம்பலப்படுத்தியுள்ளார். அந்த குழுவின் அட்மின் அனில் குமார் பேடிஎம் மூலம் அவருக்கு ரூ.500 செலுத்தியுள்ளார்.

10 நிமிடத்தில் அவர் கேட்ட நபரின் ஆதார் விவரத்தை அனில் கொடுத்துள்ளார். இன்னும் 300 ரூபாய் செலுத்தினால் ஒரு ஐடி மற்றும் பாஸ்வோர்ட் கொடுப்பார். அதன் மூலம் ஆதார் தளத்தில் இருந்து எந்த நபரின் விவரங்கையும் பெற்றுக்கொள்ள முடியுமாம்.

தற்போது இந்த வாட்ஸ்அப் குழுவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த குழு மூலம் நாம் ஆதாரில் என்ன விவரம் எல்லாம் கொடுத்து இருக்கிறோமோ அதை எல்லாவற்றையும் அபகரிக்க முடியும். இதுவரை ஆதாரில் யார் எல்லாம் தங்களது பெயரை பதிவு செய்தார்களோ அவர்கள் விவரம் எல்லாம் திருடப்பட்டிருக்கிறது.

இந்த ஒரு குழு மட்டும் இல்லை, இந்தியா முழுக்க 100க்கும் அதிகமான குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்