அரசியலில் குதித்து காணாமல்போன 5 தமிழ் ஹீரோக்கள்!

0
669

முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி என அனைவரும் சினிமாவிலிருந்து தங்களது கொள்கைகளை வளர்த்தெடுத்து, அரசியலில் கலக்கியவர்கள்தான். சினிமாவே தமிழக அரசியலுக்கு முதற்படி எனும் தாரகத்தை உண்டாக்கியவர்களே இவர்கள்தான். இன்று நரேந்திர மோடி ட்விட்டரில் போராடி வளர்த்துக்கொண்டிருக்கும் கொள்கைகளை, அன்று நம்மவர்கள் நாடகங்களிளும், திரையரங்குகளிளுமே எளிதாக வளர்த்தெடுத்தனர். மக்கள் மனதில் கொள்கைகளை மிக மிக எளிதாக அமர்த்தினர். பெருங்கூட்டங்களை சேர்த்தனர். இந்த ஸ்ரேட்டஜியை அப்படியே கையாண்டு கட்சி வளர்க்கப் போவதாக கிளம்பிய நடிகர்கள் சிலர் கடைசியில் அரசியலையும் கோட்டை விட்டனர், சினிமாவையும் கோட்டை விட்டனர். அப்படிப்பட்ட 6 பிரபல நடிகர்களைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

 டி.ராஜேந்திரன்:

#1 டி.ராஜேந்திரன்:

காதலை கசக்கிப் பிழிந்து ஜூஸ் போடும் விதமாக எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் இவர் இயக்கியதுதான். தி.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிட்டி தோல்வியை தழுவிவிட்டு, கண்ணீரும் கம்பளையுமாக மறுமலர்ச்சி தி.மு.க. என தனிக்கட்சி தொடங்கினார். ஆரம்பத்தில் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை; இப்போதும் கூட யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கட்சி அறிக்கைகள் மட்டும் வருடாந்திர பதிப்பாக வந்துகொண்டே இருக்கின்றன. எந்த பிரச்சினை என்றாலும் இவரது குரல் அங்கே ஒலிக்கும். எல்லா அநியாயங்களையும் தட்டிக்கேட்கும் தாடி வைத்த ஹீரோ.

நெப்போலியன்

#2 நெப்போலியன்:

இவரும் பல வெற்றிப்படங்களில் நடித்தவர். தி.மு.க சார்பில் 2001 தேர்தலில் வெற்றிப்பெற்றார். என்ன பிரச்சினையோ தெரியவில்லை தி.மு.கவில் இருந்து திடீரென்று விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து, தற்போது அரசியலில் இருந்தும் விலகி மாயமாகியுள்ளார். குறிப்பிட்ட வகுப்புவாதத்தை ஆதரிக்கும் படத்தில் வெள்ளை வேட்டியுடன் தோன்றி வீரவசனம் பேசினார். திடீரென்று ஒரு B கிரேட் ஹாலிவுட் படத்தின் ட்ரெய்லரில் ஸ்டைலீஷாக தோன்றி அசத்தினார். அண்ணன் இன்னும் சில மாதங்கள் ஹாலிவுட்டில் பிஸியாக இருப்பார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்