இன்னுமா தமிழகத்தில் இந்த அவலம் நடக்கிறது…?

0
802

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் தை பூசத்திற்கு பக்கத்து ஊரில் அன்னதான நிகழ்ச்சிக்கு சென்று திரும்பி வந்து கொண்டியிருந்தனர். அவர்கள் வெட்டி மடித்துக் கட்டியிருந்ததற்கு மணிகண்டன் தகாத சொற்களால் கூறி அடித்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக அடுத்த நாள் பஞ்சாயத்துக்கு வர வழைத்து அரை நிர்வாணமாக கைகளை பின்னால் கட்டி வைத்து அடித்தாக கூறுப்படுகிறது. சாதியின் பெயரை சொல்லி திட்டியதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை குறித்து போலீஸாரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால், இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்க வந்தோம். என்று பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.