தமிழ் சினிமாவின் 5 க்யூட்டான காதல் ஜோடிகள்!

0
4165

கபாலி – குமுதவள்ளி:
பா. ரஞ்சித் இயக்கத்திள் வெளியான கபாலி திரைப்படம் கபாலி – குமுதவள்ளி இடையிலான ஆழமான காதலை நமக்கு அழகாக விவரித்தது. பல ஆண்டுகளாக தன்னிடம் இருந்து பிரிக்கப்பட்டிருந்த காதல் மனைவியை பார்க்கும்போது கபாலியின் கண்களில் மாயநதி பெருகும். “மாயநதி இன்று… மார்பில் வழியுதே… தூய நரையிலும்… காதல் மலருதே…” என மிக அழகானதொரு பாடலின் பொருள் நம் வாழ்க்கையின் உண்மையான காதலை, மிக ஆழமான காதலை தேட நம்மை இட்டுச்செல்லும்.

பாண்டி – பூந்தென்றல்:
தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி’ திரைப்படம் காதலுக்கு நேரமில்லை என சொன்னது. இளம் வயதில் காதலில் குதிக்கும் பாண்டியும், பூந்தென்றலும் பெற்றோர்களால் பிரிக்கப்படுகிறார்கள். பாண்டி கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்து சினிமாவில் பிரபலமாகிறார். மகன் மீதுள்ள கோபத்தால் தனது முன்னால் காதலியை தேடிச் செல்கிறார். அங்கே தன் பூந்தென்றலை காண்கிறார். மீண்டும் காதலை தொடர்கிறார். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய காதல் கதை இது.

ஜோதி – கனி:
மிக மிக சாமானியனுடைய காதலை படம்பிடித்துக் காட்டியது ‘அங்காடித்தெரு’ திரைப்படம். ஒரே இடத்தில் பணிபுரியும் ஜோதியும் கனியும் காதலிப்பதால் வேலையை இழக்கிறார்கள். பொருளாதாரத்தைப் பற்றிய கவலை ஏதுமின்றி சாலையில் பட்டம்பூச்சிகளாக பறக்கிறார்கள். சாமானிய காதலின் கிரவுண்ட் ரியாலிட்டியை இயக்குநர் அழகாக காட்டியிருப்பார். இந்த படமும் தமிழ் சினிமாவில் பேசப்பட்டது.

ஜான் – ரெஜினா:
தங்களுடைய சம்மதம் இல்லாமல் பெற்றோர்களால் ஜானும், ரெஜினாவும் சேர்த்துவைக்கப்படுகிறார்கள். இருவருக்கும் கசப்பான, சோகமான காதல் அனுபவம் இருக்கிறது. ஒருவருக்கொருவர் இதை வெளிப்படுத்திக் கொள்ளாமல், அமைந்த வாழ்க்கையை வாழாமல் படத்தின் இறுதி வரை பயணிக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் காதலை உணர்கிறார்கள். ‘ராஜா ராணி’யாக வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள். காதலுக்குப் பின்னும் வாழ்க்கை இருப்பதை உணத்துகிறது இப்படம்.

வருண் – லீலா:
கார்கில் போரில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரகளில் ஒருவன் வருணுக்கு போர்முனையில் லீலா மீது காதல் மலர்கிறது. மணிரத்னத்தின் அழகான காதல் ஓவியத்தில் இருந்து வருணை பாகிஸ்தான் ராணுவம் பிணைக்கைதியாக சிறைபிடித்துச் சென்றுவிட, லீலா தனிமையில் வாடுகிறாள். பல வருடங்களுக்குப் பின் திரும்பி வரும் வருணை லீலா எப்படி ஏற்றுக்கொள்கிறாள்? என்பதுதான் கதை.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்