தமிழ்நாட்டின் 5 முக்கிய டிவி பஞ்சாயத்து தலைவிகள்!

0
14716

குடும்ப பிரச்சனையை இழுத்து வந்து பஞ்சாயத்து பண்ணவது தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாறியுள்ளது. அதற்கு பிரபல சினிமா நடிகைகள் தான் பஞ்சாயத்து தலைவராகவும் இருக்கின்றனர். அந்த குடும்ப பிரச்சனையை இவர்கள் தான் தீர்த்து வைக்கின்றனர்.

முதலில் விஜய் தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தது. ‘கதையல்ல நிஜம்’ என்ற நிகழ்ச்சியில் நடிகை லட்சுமி தான் பஞ்சாயத்து தலைவர்.

பிரபல செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் முதல் பஞ்சாயத்து தலைவியாக இருந்தார்.

பிரபல நடன இயக்குனரும், நடிகையுமான சுதா சந்திரன் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் இரண்டாவது பஞ்சாயத்து தலைவர் பதவியை வகித்தார்.

 

தற்போது ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியினை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். இவர் வந்த பிறகுதான் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு டி.ஆர்.பி. எக்கச்சக்கமாக ஏறியது. பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கிண்டலடிக்கப்பட்டது.

சன் டிவியில் ‘நிஜங்கள்’ என்ற நிழச்சியை நடிகை குஷ்பூ தொகுத்து வழங்கினார். அங்கேயும் சிலப்பல பஞ்சாயத்துக்களை புதுவிதத்தில் நடத்தி டி.ஆர்.பி. ஏற்றினார்.

 

உங்க கருத்தை தெரிவிக்கலாம்