இந்த 3 பேரை தமிழ்நாடும், தமிழர்களும் என்றுமே மறக்கக் கூடாது!

0
715

தமிழகம் இன அடிப்படையிலும், மொழி அடிப்படையிலும் ராச்சிய பிரிவாக மலர்ந்த பிறகு எத்தனயோ போராட்டங்களை கண்டிருக்கிறது. எத்தனையோ தியாகங்களும், வரலாற்று நிகழ்வுகளும் நிகழ்ந்திருக்கின்றன. மொழி சுதந்திரத்திற்காக எண்ணற்ற பல போர்க்களங்கள் தோன்றியுள்ளன. ஆனால் இந்த போராட்டங்களில் நமக்காக முன்னின்று தன் இன்னுயிர் நீத்த தலைவர்களின் பெயர்களும், அவர்களது வரலாறும் நமக்கு என்றுமே சொல்லிக்கொடுக்கப்படாத விடயமாகவே இருக்கிறது என்பது வருந்தமே. இந்த கட்டுரையில் தமிழகத்தின் மிக மிக முக்கியமான 3 தியாகிகளை பற்றி பார்க்கப் போகிறோம்.

 

சங்கரலிங்கனார்:
எந்த அரசியல் கட்சியையும் சாராத ‘கண்டன் சங்கரலிங்கனார்’ 1956ம் ஆண்டு மதராஸ் மாகாணமாக இருந்ததை தமிழ்நாடு என பெயர் மாற்றிட தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். இவரது மரணம் கல்லூரி மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியது. இதனால் அஞ்சிய காங்கிரஸ் அரசு சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியது.

 

ம.பொ. சிவஞானம்:
மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, ‘மதராஸ் மனதே’ என ஆந்திரர்கள் சென்னையை கேட்ட போது, அதனை எதிர்த்துப் போராடி தமிழ்நாட்டின் தலைநகராக சென்னையை நிர்ணயித்தார். சங்க இலக்கியத்தில் திருவேங்கடம் என அழைக்கப்பட்ட திருப்பதி நகரையும் தமிழகத்துடன் இணைக்க போராடினார்.

 

மார்ஷல் நேசமணி:
தமிழர்களின் தாய் மண்ணான குமரி மாவட்டத்தை கேரளாவிற்கு கொடுக்க முயன்றபோது வன்மையாக போராடி மீட்டவர்தான் மார்ஷல் நேசமணி. சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆர்வத்தாலும், ஆளுமையாலும் ‘சிலம்புச் செல்வர்’ என போற்றப்பட்டார். மதராஸ் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய போராடியவர்களில் நேசமணியும் முக்கியத்துவம் வாய்ந்தவர்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்