2018 புத்தாண்டு ராசிபலன்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு சர்பிரைஸ் காத்திருக்கிறது!

0
8195

நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மேஷ ராசிக்காரர்களே, நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புவீர்கள். மனிதநேயம் மிக்க குணவான்கள். உழைப்புக்கும், முயற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் உழைப்பாளிகள். இந்த 2018ம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதை இங்கே பார்ப்போம்.

2௦17, செப்டம்பர் வரை 6ம் இடத்தில் இருந்த குருபகவான் உங்களுக்கு சங்கடமான சூழ்நிலைகளை கொடுத்திருப்பார். போதாக் குறைக்கு அட்டமா சனியும் ஒரு பாடு படுத்தியிருக்கும். இதற்கெல்லாம் விடிவுகாலம் பிறக்காதா? என நொந்து கொண்டிருப்பீர்கள்.

2018 புத்தாண்டு ராசிபலன்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு சர்பிரைஸ் காத்திருக்கிறது!

கவலை வேண்டாம்:
இந்த 2018ம் ஆண்டு உங்களது குறைகளை எல்லாம் தீர்க்கப் போகிறது. அட்டமத்தில் அமர்ந்துகொண்டு பல கஷ்டங்களை கொடுத்துக் கொண்டிருந்த சனி பகவான் 9ம் இடத்திற்கு சென்று அமர்ந்து உங்கள் மீது இந்தாண்டு கருணை கடாட்சத்தை வழங்கப் போகிறார்.

2018 புத்தாண்டு ராசிபலன்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு சர்பிரைஸ் காத்திருக்கிறது!

உழைப்பும் உயர்வும்:
உழைப்பிற்கும் பேர்போன நீங்கள் அயராது உழைத்து முன்னேற்றம் அடையப் போகிறீர்கள். சிறப்பான பல சுபகாரியங்கள் நடக்கும். உடலில் உள்ள பிணிகள் தீர்ந்து நலம் அடைவீர்கள்.

2018 புத்தாண்டு ராசிபலன்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு சர்பிரைஸ் காத்திருக்கிறது!

குருவின் கருணை:
குரு பகவானும் இந்தாண்டு உங்கள் மீது கருணை காட்ட போகிறார். உங்கள் ராசியை அவர் ஏழாம் பார்வையாக பார்ப்பதால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்கள் என்றால் இந்தாண்டு நிச்சயமாக திருமணம் நடக்கும்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்