இந்தாண்டின் கடைசி கிரிக்கெட் தொடர்… மீண்டும் இந்தியாவே வெல்லும்!

0
121

கட்டாக்கில் இலங்கைக்கு எதிராக நடந்த முதல் டி2௦ போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து நாளை இந்தூரில் நடக்கும் போட்டியிலும் வெற்றி வாய்ப்பு இருப்பதற்கான நம்பிக்கையை ஏற்பட்டுள்ளது.

நாளை இந்தூரில் இரண்டாம் போட்டியும், மூன்றாவது போட்டி 2௪ம் தேதி மும்பையிலும் நடைபெற உள்ளது. ஏற்கெனவே நடந்து முடிந்துள்ள கட்டாக் போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என எல்லா துறையிலும் இந்திய அணி சிறப்பான முறையில் விளையாடியுள்ளது.

மேற்கூறிய காரணங்களை வைத்துப் பார்க்கும்போது இந்த ஆண்டின் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியே வெல்லும் என சின்னக்குழந்தையும் சொல்லும். இந்திய அணி இலங்கைக்குச் சென்று போட்டிகளை கைப்பற்றியதைப் போல இந்த முறை சொந்த மண்ணில் இலங்கை அணியை வொய்ட் வாஷ் செய்து வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாக உள்ளது.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்