வேலூரிலும் கோவில் தேர்கள் 2 தீப்பிடித்து எரிந்தன..! திட்டமிட்ட சதியா? அல்லது கடவுள் கோபமா?

0
260
வேலூரிலும் கோவில் தேர்கள் 2 தீப்பிடித்து எரிந்தன..! திட்டமிட்ட சதியா? அல்லது கடவுள் கோபமா?

வேலூர் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த 2 தேர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. அப்பொழுது இருகில் இருந்தவர்கள் உடனே தீயை அணைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கடைகள் தீப்பிடித்து எரிந்ததில் கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்று திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் கோயிலின் ஸ்தல விருட்சமே எரிந்து நாசமாகியது. இந்நிலையில் தற்போது வேலூரில் கோவிலில் இருந்த 2 தேர்கள் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன. இதைப் பார்த்து அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தொடர் தீவிபத்துக்கள் மேலும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது திட்டமிட்ட சதியா? அல்லது கடவுளின் கோபத்தால் இப்படி நடக்கிறதா? என்று மக்கள் கவலையில் உள்ளனர்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்