24 வயது ,18 கேஸ் தனிஒருவன் ரவுடி ‘விஜி’ வெட்டி கொலை

0
4205

சென்னையில்  ரவுடி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுவண்ணாரப்பேட்டை பல்லவன் நகரை சேர்ந்த 24 வயதாகும் விஜி என்ற விஜயகுமார் காசிமேடு பகுதியில் படகு பழுதுபார்க்கும் வேலை செய்து வந்தவர். பிறகு கஞ்சா விற்பனையில் சில காலம் ஈடுபட்டுள்ளார். வியாபாரம் சூடு பிடிக்க சூடு பிடிக்க, வடசென்னையை உள்ள பிரபல ரவுடி ஒருவருடன் அறிமுகம் கிடைத்துள்ளது.

ஆரம்பத்தில் அவருடைய அடியாட்களில் ஒருவராக செயல்பட்டு வந்துள்ளார். அதன்பிறகு ஒரு முக்கிய ரவுடியாக வலம் வந்துள்ளார் விஜி. கட்டப்பஞ்பாயத்து, ஆள்கடத்தல், கொலை முயற்சி, மிரட்டல் என விஜி நுழையாத சட்டவிரோத செயல்கள் இல்லை. போலீசாரின் லிஸ்டில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அளவிற்கு பல குற்றங்களை செய்து வந்துள்ளார்.

எப்பொழுதும் விஜியை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். வழக்குகள் தொடர்பாக காவல் நிலையம் நீதிமன்றம் என அடிக்கடி சென்று வருவார். விஜியை பிடிக்காமல் எதிரிகள் அதிகம் உருவாகினார்கள். இந்த சூழலில் பாரிமுனையில் உள்ள ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்துக்கு வந்து விசாரணை முடிந்து வீட்டு திரும்பியுள்ளார்.

விஜி தனியாக செல்வதை அறிந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மண்ணடி தம்புசெட்டி தெருவில் வரும் போது விஜியை மறித்து வெட்டியுள்ளனர். உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார் விஜி. இருந்தாலும் அந்த கும்பல் ஒட ஒட விரட்டி வந்து வெட்டியுள்ளனர். உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்தும் அந்த கும்பல் விடாமல் சென்று வெட்டி விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த விஜி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் விஜி இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். பட்ட பகலில் நடந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்துக் ஓடினர். இச்சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. எதற்காக இந்த கொலை நடந்தது என்று போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜியின் மீது இதுவரை 18 வழக்குகள் உள்ளன. நீதிமன்றத்துக்கு தனியாக வருவதை அறிந்துக்கொண்டு திட்டமிட்டப்படி கொன்றுள்ளனர். கொலை செய்தவர்களுக்கு 25 வயதிலிருந்து 30 வயதுக்குள் தான் இருக்கும் என்றும் முன்விரோத காரணமாக நடந்திருக்கும், விஜியின் எதிரிகள் தலைமறைவாகி விட்டதால் கொலைக்காக சரியான காரணம் தெரியவில்லை என்று போலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.